எல்லா குழந்தைகள் போல் தீஷுவிற்கும் கதைகள் இஷ்டம். தினமும் தந்தையிடம் கதை கேட்டு தூங்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. ஒரு நாள் கதை கேட்காமல் தூங்கி,அவளை அறியாமல் பாதி தூக்கத்திலிருந்து எழுந்து இன்னைக்கு கதை சொல்லவில்லை என்று அழுத சம்பவம் அவள் கதைகள் மீது கொண்டுள்ள பற்றுக்குச் சான்று.
ஒரு கதை புத்தகம் படித்தப்பின் அந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வரைதல், போன்ற செயல்முறைகள் நாங்கள் இது வரை செய்ததில்லை. காரணம் என் சோம்பேறித்தனம். ஆனால் தீஷுவிற்கு சமீப காலமாக கதையில் நடக்கும் சம்பவங்களை நடித்துக் காட்டுவதில் விருப்பம் வந்திருக்கிறது.
அவளிடம் Hiccups for elephant என்ற புத்தகம் உள்ளது. அதில் மற்ற விலங்குகள் தூங்கும் பொழுது யானைக்கு விக்கல் வந்து விடும். ஒவ்வொரு விலங்காக தூக்கத்திலிருந்து எழுந்து, விக்கல் நிற்பதற்கு ஒவ்வொரு வழிமுறை கூறும். விக்கல் நிற்காது. இறுதியில் எலியின் உதவியால் விக்கல் நின்றுவிடும். அனைத்து விலங்குகளும் மீண்டும் தூங்க ஆரம்பிக்கும் பொழுது யானைக்கு தும்மல் ஆரம்பித்து விடும். தீஷு மிகவும் பிடித்த புத்தகம். ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, "அம்மா, நான் தான் யானை" என்று விக்கத் தொடங்கினாள். எனக்கு புரிந்து விட்டது. நான் குதிரையாக மாறி நடிக்கத் தொடங்கினோம். அதன் பின் எந்த புத்தகம் படித்தாலும் அதை நடித்து காட்ட முடியும் என்றால் தீஷுவும் நானும் புத்தகத்திலிருந்த பாத்திரங்களாக மாறி மாறி நடித்துக் காட்டுவோம்.
நடித்துக் காட்டுவதால் 2 நன்மைகளை என்னால் கண் கூடாக காணமுடிகிறது.
1. கற்பனை சக்தி வளர்கிறது. சிங்கம் என்றால் சிங்கம் போல் நடப்பது, கர்ஜிப்பது என்று தானே சிங்கமாக மாறி புத்தகத்தில்லாத வர்ணணைகளையும் செய்வது.
2. தீஷுவிற்கு மிகவும் கூச்ச சுபாவம். அவளுக்கு நடித்துக் காட்டுவது பிடித்து இருப்பதால், ஆர்வத்தின் காரணமாக பிறர் இருப்பதை கண்டு கொள்ளாமல் செய்கிறாள். அவளின் கூச்ச சுபாவம் அந்த நேரத்தில் வெளிப்படுவது இல்லை.
உங்கள் குழந்தையுடன் சேர்ந்து செய்ததை உங்கள் தளத்தில் எழுதி அந்த இடுகையின் முகவரியை கீழுள்ள "Click to enter" என்ற லிங்க்கை அழுத்தி லிங்கியில் இணையுங்கள்.
Games to play with 3 year old without anything
2 years ago
நீங்க சொல்றது போல நடித்து காமிக்கறது மூலமா நிச்சயமா அவங்க கற்பனை சக்தி அதிகமாகும் . நாங்களும் அவ்வப்போது இந்த மாதிரி தான் விளையாடறோம். கதைகள படிக்கறதோட, நடிக்கவும் வைக்கறதால புது புது வார்த்தைகளை உபயோகபடுத்தவும் தெரிஞ்சுக்குவாங்க. - தேஜாம்மா
ReplyDelete