பத்து சோழிகள் எடுத்துக் கொண்டோம். குலுக்கி போட வேண்டும். திரும்பி இருக்கும் சோழிகளை பிரித்து எண்ண வேண்டும். நேராக இருக்கும் சோழி எவ்வளவு இருக்கிறது என்று எண்ணாமல் Cuisenaire rod கொண்டு கண்டுபிடிக்க வேண்டும்.
Cuisenaire rod டில் பத்தாம் நம்பரை எடுத்துக் கொண்டோம். எவ்வளவு சோழி திரும்பி இருக்கிறதோ அந்த எண் ராடை பத்தாம் நம்பர் பக்கத்தில் வைக்க வேண்டும். பத்தாம் நம்பர் அளவு வருவதற்கு எந்த ராடை வைக்க வேண்டுமோ அதை வைத்து, நேராக இருக்கும் சோழியின் அளவை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு 3 சோழிகள் திரும்பி இருந்தால், பத்தாம் ராடு பக்கத்தில் மூன்றை எடுத்து வைக்க வேண்டும். ஏழாம் ராடை வைத்தால்(3+7=10) மட்டுமே பத்தாம் நம்பர் ராடு அளவிற்கு இருக்கும். ஆகையால் நேராக இருக்கும் சோழி ஏழு என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரு நம்பரை வெவ்வேறு வழியில் (1+9=10, 2+8=10 etc) உருவாக்க முடியும் என்று புரியும். இது முடித்தவுடன், அதே பத்தாம் ராடை வைத்து வெவ்வேறு ராடுகள் கொண்டு உருவாக்கினோம். ஒன்றாம் எண்ணை வைத்தால், ஒன்பதாம் எண்ணை வைத்தால் தான் பத்து வரும் என்றும் ஒவ்வொரு முறையும் ஒன்று என்றால் ஒன்பது தான் என்றும் புரிய முடியும். அதன் பின் (1+9 = 9+1 =10) என்று ராடு வைத்து சொல்லிக் கொடுத்தேன்.
தீஷுவிற்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வம் இருந்தது.
உங்கள் குழந்தையுடன் சேர்ந்து செய்ததை உங்கள் தளத்தில் எழுதி அந்த இடுகையின் முகவரியை கீழுள்ள "Click to enter" என்ற லிங்க்கை அழுத்தி லிங்கியில் இணையுங்கள்.
No comments:
Post a Comment