Sunday, October 25, 2009

வ‌டிவேலுவும் நானும்

தீஷுவிடம் இப்பொழுது பல்பு வாங்குவது அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட என் நிலைமை வடிவேலு மாதிரியாகி விட்டது.

"அம்மா, என் விரல் எப்படி இருக்குனு பாரேன்.."

"நீட்டி வச்சியிருக்கியா?"

"இல்லை, எப்படி இருக்குனு சொல்லு.."

"அழுக்கா இருக்கா?"

"எங்க அழுக்கு இருக்கு, எப்படி இருக்குனு சொல்லு"

"பெருசா இருக்கா?"

"இல்ல, எப்படி இருக்குனு சொல்லு"

"சிறுசா இருக்கா?"

"இல்ல, எப்படி இருக்குனு சொல்லு"

(பொறுமை இழந்து )"தெரியலடா.."

"சரி, இங்க இருக்குனு சொல்லு..."

(அப்பாடா தப்பித்தால் போதும் என்று சந்தோஷத்தில்) "இங்க இருக்கு"

"சரி, எப்படி இங்க இருக்குனு சொல்லுற?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

***********************************************************

தீஷு ஒரு பேப்பரில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

"தீஷு, பால் குடிக்கிறீயா?"

(நிமிர்ந்து பார்த்து சற்று அதிகார தோரணையில்) "நான் எழுதிட்டு குடிக்கிறேனு எத்தன தடவ சொல்றது? திரும்ப திரும்ப கேட்கக்கூடாது"

"அப்படி சொன்னீயா?" (சொன்னது கேட்கவில்லை என்ற அர்த்தத்தில்)

சிறிது நேரம் யோசித்துவிட்டு, " சரி, நான் இப்பத் தான் சொல்லப் போறேன்.. எழுதிட்டு குடிக்கிறேன். இனிமேல் கேட்கக் கூடாது" (சொல்லவே இல்ல.. அதுக்குள்ள இப்படி ஒரு அதிகாரம்)..

எப்ப இப்படி தாக்கப்போறாளோனு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு..

11 comments:

  1. :)) ஹிஹி...வெல்கம் டூ த க்ளப்!!

    ReplyDelete
  2. \\சந்தனமுல்லை said...
    :)) ஹிஹி...வெல்கம் டூ த க்ளப்!!//

    வழிமொழிஞ்சுக்கிறேன்ப்பா..:)

    ReplyDelete
  3. :-))))))))))))))))))))

    ரொம்ப நேரம் சிரிச்சுட்டு இருந்தேன்!

    //சிறிது நேரம் யோசித்துவிட்டு, " சரி, நான் இப்பத் தான் சொல்லப் போறேன்.. எழுதிட்டு குடிக்கிறேன். இனிமேல் கேட்கக் கூடாது" //

    LOL :)

    ReplyDelete
  4. பல்பு வாங்குவோர் சங்கமா? ஓகே! ஓகே!

    ReplyDelete
  5. ஹஹா, க்யூட்

    ReplyDelete
  6. i enjoy ur posting. dheekshu is becoming a smart girl.(sorry i dont know tamil typing. so ta-nglish :)).

    ReplyDelete
  7. Superb conversation..really enjoying dheekshu's activities thru your live telecasting.(sorry dont know tamil typing..so english)

    ReplyDelete
  8. ஹாஹா.. குடுத்து வச்சவங்க..
    எங்க அக்கா பொண்ணு பேரும் தீக்ஷிதா தான். எல்கேஜி படிக்கிறா. 2 நாள் முன்னாடி போன்ல பேசிட்டிருந்தேன்.

    “ மஞ்சுளா மிஸ்கிட்ட சஞ்சய் மாமா உங்கள ரொம்ப கேட்டாங்கன்னு சொல்லுடி”

    “ வாடா வா... நான் எப்டி சொல்வேன் தெரியுமா? மிஸ், இந்த சஞ்சய் மாமனுக்கு கொழுப்பு பார்த்திங்களா மிஸ்னு சொல்வேன்”

    ... நம்ம பப்பு எல்லாம் இவங்க கிட்ட வேகறதில்லைங்க.. :)

    ReplyDelete
  9. வந்த அனைவருக்கும் நன்றிகள்..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost