கடந்த ஞாயிறு தீஷுவிற்கும் அப்பாவுக்கும் சேர்ந்து செலவிட நேரம் கிடைத்தது. அப்பா ஒரு வார்த்தைச் சொல்லுவார். அந்த வார்த்தை எந்த ரைமிஸ்ஸில் வருகிறது என்பதை தீஷு கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு Well என்றவுடன், Ding Dong bell, pussies in the well என்று சொல்ல வேண்டும். தீஷு விருப்பமாக விளையாண்டு கொண்டிருந்தாள்.கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் கண்டுபிடித்து விட்டாள். ஆனால் அவளுக்குத் திரும்ப வார்த்தைகள் சொல்லத் தெரியவில்லை.
அவர்கள் அடுத்து செய்தது இந்தியா பஸில் மாப். அது ஆறு வயதினருக்குரியது என்பதால், Self correcting கிடையாது. எந்த இடத்தில் எந்த பீஸையைப் பொருத்தினாலும் பொருந்தும். இதனால் தான் சரியாகத்தான் செய்கிறோமா என்று தீஷுவிற்குத் தெரிவதில்லை. எனக்கு அவளுக்கு முதல் முறை சொல்லுக்கொடுக்கலாம் என்ற எண்ணம். ஆனால் அப்பாவுக்கு அவளாக செய்ய வேண்டும் என்று. பிறகு சிறிது உதவி தீஷுவிற்குத் தேவைப்பட்டது. முடித்துவிட்டாள். ஆனால் இந்த பஸில் மாப்பில் எனக்கு திருப்தி இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பீஸாக பஸில் இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். இதன் மூலம் திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் மாநிலங்களின் பெயர்கள் தெரிய ஆரம்பிக்கும். இது மாப் கற்பதற்கு என்றில்லாமல் மற்றொருமொரு பஸில் போலவே இருக்கும்.
Games to play with 3 year old without anything
2 years ago
ரசித்தேன்...நானும் அப்ப்டிப்பட்ட பசிலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். லேண்ட்மார்க்கில் கிடைக்கிறது..நாங்க்ள் போகும்நேரம் ஸ்டாக் இருப்பதில்லை...புக் எக்ஸ்பிஷனில் கிடைக்கலாம்!
ReplyDelete