1. தீஷு நான் என் certificates அடுக்கி வைப்பதைப் பார்த்து தனக்கும் certificates வேண்டும் என்றாள். என் கணவர் அவளிடம்
அப்பா : "நீ பெருசா வளர்ந்தவுடனே உனக்கும் certificates கிடைக்கும்"
தீஷு : "எவ்வளவு பெருசா?"
அப்பா : "இந்த Globe இருக்குற ஹயிட் வரைக்கும்"
தீஷு உடனே ஒரு ஸ்டூல் எடுத்துக் கொண்டு வந்து, அதன் மேல் ஏறி நின்று
தீஷு : "Globe வரைக்கும் வளர்ந்துட்டேன்.. இப்ப certificates கொடுங்க" அப்பா : ?????
2. தீஷுவிற்கு இப்பொழுது உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. என்னிடம் வந்து,
தீஷு : "அம்மா, நமக்கு எதுக்கு நெஞ்சு இருக்கு?"
அம்மா : "அங்க தான் ஹார்ட்(Heart) இருக்கு"
தீஷு : "அப்ப கோல்ட் (Cold) எங்க இருக்கு?"
Heartக்கு Hot என்று நினைத்திருக்கிறாள்.
3. ஆஸ்பத்திரி வையிட்டிங் ரூமில் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் எழுந்து வெளியே சென்றாள்.
தீஷு : அவுங்க எங்க போறாங்க?
அம்மா : திரும்பி வந்திடுவாங்க..
தீஷு : நான் அது கேட்கலை... எங்க போறாங்க தான் கேட்டேன்.
அம்மா பதில் தெரியாமல் முழிக்க, பக்கத்தில் இருந்தவர்கள் முகத்தில் சிரிப்பு.
4. தீஷுவும் அப்பாவும் காத்திருந்த நேரத்தில் வாக்கிங் போயிருந்தார்கள். திரும்பி வரும் பொழுது தீஷு வழி சொல்லிக் கொண்டே வந்திருக்கிறாள். வழி எப்பொழுதும் லெஃப்ட்ல போ என்று தான். ஒரு இடத்தில் லெஃப்ட் எடுத்ததால், வழி மாறியிருக்கிறார்கள். உணர்ந்து கொண்ட தீஷு "அப்பா யார்கிட்ட யாவது வழி கேளு.. ஹோமியோ கிளினிக் எங்கயிருக்குனு?"
5. தீஷு தோழி போன் செய்த பொழுது இவள் தூங்கி கொண்டிருந்தாள் (அந்த குழந்தைக்கு இன்னும் மூன்று வயது கூட ஆகவில்லை... அதற்குள் இவுங்க இரண்டு பேருக்கும் போன்). எழுந்தவுடன் சொன்னேன். அப்படியா என்ற தீஷு, எனக்கு அவ நம்பர் தெரியாதே.. எப்படிமா போன் பண்றது என்றாள் கவலையுடன்.
Games to play with 3 year old without anything
2 years ago
மிகவும் ரசித்தேன்! ஸ்வைன் ப்ளூ லீவிலே போன் விவகாரம் இங்கேயும் நடந்தது...பப்பு-வர்ஷினி நட்பாலே வர்ஷினி அம்மாவும் நானும் நட்பாகிட்டோம்!! :))
ReplyDeleteதீஷூ சூப்பரா பல்பு கொடுக்கறாங்க போல!! :))
தீஷு : அவுங்க எங்க போறாங்க?
ReplyDeleteஅம்மா : திரும்பி வந்திடுவாங்க..
தீஷு : நான் அது கேட்கலை... எங்க போறாங்க தான் கேட்டேன் //
பசங்க கிட்ட பல்பு வாங்குவோர் சங்கத்துல ரிஜிஸ்தர் செஞ்சிருங்க :))))))))