Friday, October 23, 2009

ஒன்றில் ப‌ல

தீஷுவிற்குப் போரிங் (Pouring) , ஸ்பூனிங் (Spooning), சார்ட்டிங் (Sorting) போன்ற‌ ஆக்டிவிட்டீஸில் விருப்ப‌மிருப்ப‌தில்லை. அவ‌ள் வ‌ய‌திற்கு அவை எளிமை என்று தோன்றுகிற‌து. அத‌னால் இப்பொழுது இர‌ண்டு மூன்று ஆக்டிவிட்டீஸைச் சேர்த்து கொடுக்க‌ வேண்டியிருக்கிற‌து. அப்ப‌டி செய்த‌வ‌கையில் இர‌ண்டு..




க‌ணித‌த்தில் செய்து வெகு நாளாகிவிட்ட‌து. ஒரு சிறிய‌ பையில் ஒரு பட்ட‌ம்பூச்சி பொம்மை, இர‌ண்டு ஆப்பிள் பொம்மை, மூன்று காரெட், நான்கு.. என்று ப‌த்து சோழிக‌ள் வ‌ரை வைத்து விட்டேன். முத‌லில் தீஷு ஒவ்வொன்றையும் பிரிக்க‌ (Sorting)வேண்டும். பின் ஒன்று முத‌ல் ப‌த்து வ‌ரையிலான‌ ப்ளாஷ் கார்டை எடுத்துக் கொள்ள‌ வேண்டும். ஒவ்வொரு பிரிவாக‌ எண்ணி அத‌ன் பிரிவில் எத்த‌னைப் பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌வோ அவ‌ற்றை எண்ணி
(Counting) அந்த‌ எண்ணுள்ள‌ அட்டையை வைக்க‌ வேண்டும். ஆனால் பிரிக்க‌க் கொடுத்த‌ பொருட்க‌ளில் 55 இருந்த‌தால் தீஷுவிற்கு இடையில் சிறிது க‌வ‌ன‌ச் சித‌ற‌ல் ஏற்ப‌ட்ட‌து. எடுத்து வைத்துவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் முடித்து விட்டாள். அடுத்து எண்ணி அட்டை வைப்ப‌தை விருப்ப‌மாக‌ செய்தாள். இதில் பிரித்த‌ல், எண்ணுத‌ல், எண்ணைக் க‌ண்டுபிடித்த‌ல் முத‌லிய‌ன‌ இருக்கின்ற‌ன‌.




அடுத்து Transferring & Spooning .. இதில் ஸ்பூனிற்குப் ப‌தில் இடுக்கி கொடுத்து விட்டேன். இடுக்கி மூல‌ம் ஒரு கிண்ண‌த்திலிருந்து மற்றொரு கிண்ண‌த்திற்குக் க‌ற்க‌ள் மாற்ற‌ வேண்டும். தீஷு விருப்ப‌மாக‌ச் செய்ய‌வில்லை. அவ‌ளுக்கு மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து. அதில் அவ‌ள் க‌ற்ப‌னையாக‌ அவ‌ள் டாலுக்குச் ச‌மைக்க‌ ஆர‌ம்பித்து விட்டாள்.

2 comments:

  1. kudos Dheekshu!!!

    சார்டிங் நல்ல ஐடியா தியானா! பப்புவிற்கு பீட்ஸ் சார்டிங் - கடைகளில் கிடைக்கிறதே..விதவிதமான கலர்களில் பல வடிவங்களில் -அதைத்தான் உபயோகப்படுத்தினேன். அவளுடைய வயதிற்கு இப்போது என்ன அறிமுகப்படுத்தலாமென்று ஐடியா இருந்தால் கூறுங்களேன்!!

    ReplyDelete
  2. முல்லை.. இப்ப பப்பு தீஷு வயசுக்கு சார்டிங் எல்லாம் எளிமையானதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்ததை ஒரு பதிவா போடுகிறேன் முல்லை.. ஆனால் அதுக்கு கொஞ்ச நாளாகும் முல்லை...

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost