Sunday, August 10, 2014

அப்டேட்ஸ்

 விபத்துப் பற்றிய பதிவில் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்! இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டியிருக்கிறோம். கார் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாத சின்ன ஊரில் இருப்பதால், மூன்று நாட்களில் புது கார் வாங்கி விட்டோம். சம்மு மறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். தீஷு தான் எப்போதாவது பேசிக் கொண்டிருப்பாள். எனக்குத் தான் எந்த கார் பக்கத்தில் வந்தாலும் பயமாக இருக்கிறது. என்னால் இப்பொழுது நடக்க முடிகிறது. வலது காலில் வீக்கமும் வலியும் இன்னும் இருக்கின்றன‌. ஆனால் குறைந்து கொண்டு இருக்கின்றன‌. முழுவதும் சரியாக ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம். 


போலிஸ் ரிப்போர்ட் வந்துவிட்டது. ஒரு பெண் ஓட்டியிருக்கிறார். ஒரு நொடி கீழே பார்த்தேன், வண்டி அடுத்த லேன் போய் இடித்துவிட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார். எங்களை இடித்து விட்டு, இரண்டு மைல்கள் சென்று நிறுத்தி, அரை மணி நேரத்திற்கு பிறகு அவரே போலிஸை அழைத்து இருக்கிறார். அவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போலிஸ் ரிப்போர்ட்டில் இருக்கிறது. அவற்றைப் பார்த்தவுடன் கோபமாக வந்தது. ஆனால் போலிஸை அழைக்கும் முன், அந்த அரை மணி நேரம் எங்களை விட அவர் பயந்திருப்பார், கலங்கியிருப்பார் என்று நினைத்தவுடன் பாவமாக இருந்தது. அவர் மீது hit and run முத்திரை வேறு விழுந்திருக்கிறது.

விபத்து பற்றி போதும். நல்ல விஷயங்களை பேசுவோமா? நான் மீண்டும் சென்ற வாரம் வேலையில் சேர்ந்து விட்டேன். நானும் என் கணவரும் ஒரே கம்பெனியில் தான் இது வரை வேலை செய்திருக்கிறோம். இப்பொழுதும் ஒரு பில்டிங் தான். ஆனால் நான் அவருக்கு client. வீட்டிலும் அதையே சொல்லி அவரை வெறுப்பேற்றுவதே எனக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. குழந்தைகளை என் தோழி பார்த்துக் கொள்கிறார். அவரிடம் ஏற்கெனவே பழகி இருப்பதால், குழந்தைகளுக்கு சிரமமாக இல்லை. புதிய சூழ்நிலையை எளிதாக பழகிக் கொண்டார்கள்.  

எங்கள் தொட்டித் தோட்டத்தை உங்களிடம் காட்ட வேண்டும். 

புதினா தான் எங்கள் முதல் செடி


அப்புறம் கொத்தமல்லி

வெந்தயம்

வெந்தய அறுவடைபீன்ஸ்


வளர்ந்து வரும் தக்காளி செடி
அடுத்த வருட கோடையில் எங்கள் தொட்டித்தோ ட்டத்தை விரிவாக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.  விரிவு செய்தால் எழுதுகிறேன். 


11 comments:

 1. She may have been TEXTING or checking her MESSAGE in her phone! That few seconds are enough to cause a serious accident like this!

  ************************

  உங்க தொட்டித்தோட்டம் நல்லாயிருக்கு! :)

  உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் புதினா ஒரு மாதிரியான "வீட்" (களை) கொஞ்சம் கவனமா இருங்க. எளிதில் பல இடங்களில் பரவிவிடும். நீங்க வேண்டாம்னு சொன்னாலும் அது கேட்காமல் உங்க விருந்தினராவே பர்மணண்ட்டாக இருந்துவிடும்! :)

  I heard that in texas, you are not even allowed to water your lawn (illegal) when there is scarcity for water!

  This year CA and TX have water scarcity problem, I hear! கலிஃபோர்னியாவில் போதுமான தண்ணீர் இல்லைனு சொல்றாங்க. பரவாயில்லை, உங்களை தோட்டம்லாம் வளர்க்க விடுறாங்களே!!!!

  எங்கவீட்டில் மல்லிகை, தக்காளி, ரோஜா, வாழை (சின்ன வாழை), புதினா, கனகாம்பரம் (அப்படினு சொல்லிக்கிறோம், அந்தக் கலரில் பூப்பூக்கும், மணமே இருக்காது, ஆனால் கொஞ்சம் வேற வரைட்டி), கறிவேப்பிலை (இது உங்க ஊரில் வளர்க்க அனுமதி கெடையாது!!!) போன்ற தொட்டித் தோட்டம் உண்டு.

  வெந்தயம், மல்லிச்செடி யெல்லாம் பயிரிட்டதில்லை!

  ReplyDelete
 2. ஆம் வருண்! நானும் அவர் செல்போன் உபயோகித்திருப்பார் என்று தான் நினைக்கிறேன்.

  புதினா களை என்று எங்கள் நண்பர் ஒருவரும் கூறினார். இப்போதைக்கு ஒரு தொட்டியில் தான் இருக்கிறது. பார்க்கலாம் பரவுகிறதா என்று. பரவினால் எடுத்து விட வேண்டியது தான். கலிஃபோர்னியாவில் தண்ணீர் பஞ்சம் என்று தான் அறிவித்து இருக்கிறார்கள். சக்ரோமண்டோவிலுள்ள காபிட்டாலில் உள்ள புல்லை கூட எடுத்து விட்டார்கள். எங்களிடம் நாலே நாலு தொட்டி இருப்பதால் பரவாயில்லை :-)

  மல்லிகை, ரோஜா செடி வாங்கி வந்து வைத்தீர்களா? அடுத்து பூச்செடிகள் வைக்க வேண்டும். வெந்தயம் எளிதாக வளர்ந்துவிடுகிறது வருண். முயற்சித்துப் பாருங்கள்.

  தங்கள் கமெண்ட்டுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. மல்லிகைச் செடி சில வருடங்கள் முன்னால வாங்கியதுங்க. அது செடியின் வயதுக்கு ஏற்றார்போல் விலைனு நினைக்கிறேன். தோராயமாக $10-15 கொடுத்து நம்பிக்கை இல்லாமல் வாங்கியது (இதை உயிரோட வைத்திருக்க முடியுமா?னு). ஆனால் ஆயுள் கட்டிதான். "விண்டர்" வரும்போது கவனமாக வீட்டுக்குள்ளே வைத்துவிட வேண்டும். கலிஃபோர்னியாவில் ஃப்ராஸ்ட் எல்லாம் வராதுதானே? அதனால் உங்களுக்கு அந்தத் தொந்தரவும் இல்லைனு நெனைக்கிறேன். ஆனால் விண்டரிலும், வீட்டுக்குள் இருந்தாலம் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கணும் . இல்லைனா மடிந்துவிடும். ஆண்லைன்ல தேடிப்பாருங்க, நிச்சயம் ஜாஸ்மின் கலிஃபோர்னியாவில் கிடைக்கும்னுதான் நினைக்கிறேன். விலை பார்த்து சேல் ல வரும்போது வாங்குங்க!!

   ரோஜா, "சாம்ஸ் கிளப்பில்" சீசன் எல்லாம் முடிஞ்சதும் சேல் ல வாங்கியது. $1 டாலரோ என்னவோதான் . செடி கெடையாது. அதாவது ஒரு பேப்பரில் பாக்பண்ணி மண்ணோட ஒரு சின்ன தண்டுவில கொழுந்து இலையுடன் இருக்கும். அப்படியே ஒரு தொட்டியிலே வச்சுடலாம் (garden soil/potting mix containing ). I found it easier to get it than Jasmine. Easy to get this from shops like Walmart, Sams, Costco (not sure), Lowes. Jasmine is sort of hard to find as Americans do not know much about how precious Jasmine is! :)

   நம்ம ரோஜாச் செடியிலே ஒரு சின்ன கிளையை ஒடச்சு, இன்னொரு தொட்டில வச்சீங்கன்னா, எளிதாக இன்னொரு செடி வந்துடுது. ஆனால் செடி ரொம்ப சிறியதாக இருக்கும். வளர்ந்து பூக்கொடுக்க அடுத்த சீசன் ஆகலாம். கொஞ்சம் பொறுமையாக இருக்கணும்.

   மல்லிகையில் இதுபோல் முயன்றபோது முதலில் எனக்கு சரியாக பிடிபடவில்லை. அதாவது ஒரு 3 வாரம் சென்ற பிறகும் இலை காயாமல் இருந்தது, தோண்டிப் பார்த்தால் வேர் எதுவும் இல்லை! சும்மா அந்தக் கிளை சாகாமல் இருக்கு, செடியாகவில்ல போலனு விட்டுவிட்டேன்.

   அடுத்த வருடம். இதேபோல் ஒரு கிளையை வைத்து பேசாமல் விட்டுவிட்டேன். வளரும்னு ஏதோ தோணுச்சுபோல..விண்டரில் அதையும் உள்ள தூக்கி வச்சாச்சு. அடுத்த வருடம், சம்மரில் அந்தச் செடி (நான் கிளையை வெட்டி வைத்தது) நல்லா வளர்ந்து பூ கொடுக்க ஆரம்பிச்சுருச்சு!!! It takes time for Jamine unlike tomatoes or roses which are pretty fast! (இதைத்தான் பதியம்போடுதல்னு சொல்லுவாங்களா என்னனு தெரியலை). I am just a self-taught amateur gardener! :)))

   Delete
  2. I think we have two variety, one of them is this arabian variety

   Please check out this link..

   http://www.amazon.com/Hirts-Arabian-Tea-Jasmine-Plant/dp/B0012YIB2W/ref=cm_cr_pr_product_top

   They sell in a 4 inch pot. This must be a very small plant. I did not buy it online. Like I said the bigger the plant, costlier it would be!

   Delete
 3. விபத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதை கண்டு மிக்க மகிழ்ச்சி.
  தங்களின் பூந்தொட்டி தோட்டம் அருமை.

  ReplyDelete
 4. தொட்டித்தோட்டம் பசுமை..

  ReplyDelete
 5. புது காரு.. புது வேலை ..புது மல்லித்தழை.. புது வெந்தயம் ... :) வாழ்த்துகள் தியானா. client என்று வெறுப்பேற்றுகிறாயா? ஹ்ம்ம் தியானாவின் துணைவரே அலுவலகம் செல்லும்பொழுது விட்டுவிட்டுச் சென்றுவிடுங்கள் (என்னால் முடிந்த உதவி ;-) )

  ReplyDelete
 6. விபத்தில் இருந்து மீண்டு மீண்டும் இயல்வு நிலை வாழ்க்கை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  மகிழ்ச்சி அடைந்தேன்

  ReplyDelete
 7. விபத்திலிருந்து மீண்டு வந்த உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! எப்படியோ உங்கள் இந்தப் பதிவு மிஸ் ஆகியிருக்கின்றது. தாமதத்திற்கு மன்னிக்கவும்!

  எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

  தொட்டியில் உள்ள் அருமையானத் தோட்டம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்குன்றது. அழகாகவும் இருக்கின்றது. அதுவும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் செடிகள்!

  தங்கள் உடல் நலத்தைப் பாருத்துக் கொள்ளுங்கள் சகோதரி!

  ReplyDelete
 8. விபத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து மகிழ்ச்சி. தோட்டம் அழகா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன் பகீர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....
  வாழ்த்துகள் தியானா

  http://anu-rainydrop.blogspot.in/2014/09/blog-post.html
  நன்றி

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost