Sunday, May 18, 2014

ஹவாயி (Hawaii)

தீஷு பிறந்தநாளிற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல!

ஹவாயி! தீஷுவின் கோடை விடுமுறையில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தோம். தீஷுவின் பிறந்தநாளை அங்கு கொண்டாடினால் என்ன என்று தீடீரென்று ஒரு யோசனை தோன்ற, விரைந்து காரியத்தில் இறங்கினோம். ஹவாயியில் எட்டு தீவுகள் இருந்தாலும், முக்கியமாக நான்கு தீவுகளுக்குத் தான் மக்கள் அதிகமாக செல்கின்றனர். நாங்கள் தேர்ந்தெடுத்தது குவாயி(Kauai).

டிக்கெட், தங்கும் இடம், வாடகை கார் என்று அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன் இணையத்தில் பதிவு செய்து விட்டாலும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று  ப்ளான் செய்வது கடினமாக இருந்தது. ஆனால், எப்படியோ இணையத்தின் உதவியுடனும், சில புத்தகங்களின் உதவியுடனும் பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம். 
எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.




















15 comments:

 1. Hope you had a nice time! Pictures are nice..especially the last 3! :)

  ReplyDelete
  Replies
  1. Thanks Mahi.. I did not click even single picture.. :-)

   Delete
 2. அனைத்து படங்களும் மனதை கொள்ளை கொண்டன.....

  குழந்தைக்கு எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்!

   Delete
 3. புகைப்படங்கள் எல்லாமே வெகு அருமையாக இருக்கின்றன. நீரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பது சம்மு என்று நினைக்கிறேன்.
  அட! ஹவாயிலும் நம் கோவில் இருக்கிறதா?

  தீக்ஷுவுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. சம்மு தான் அம்மா! ஹிந்து கோயில் உள்ளது - முருகன் கோயில். இப்பொழுது சிவன் கோயில் கட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

   தங்கள் வருகைக்கு நன்றிகள்!

   Delete
 4. http://www.himalayanacademy.com/monastery
  I heard it is a beautiful temple.

  ReplyDelete
  Replies
  1. Yes Deiva.. It is really beautiful. It has some rare plants and trees. They even have rudraksha forest.

   Delete
 5. ஹவாய்யிக்கு போனதில்லை. சமீபத்தில் ஒரு சிறுவன் ஒரு ஹவாய்யி விமானத்தில் wheel well ல பறந்ததுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

  ///How did he survive the flight?

  As unlikely as it sounds, officials believe the boy rode in a tiny, cramped compartment for almost five hours, at altitudes that reached 38,000 feet, without oxygen and in subzero temperatures.

  "It sounds really incredible," said aviation expert Jeff Wise. "Being in a wheel well is like all of a sudden being on top of Mount Everest."

  Between the oxygen depletion and the cold, life expectancy "is measured in minutes," Wise said.//

  நீங்க ஒரு பர்ட்டிகுலர் தீவுக்குப் போனதாக சொன்னதும் ..சமீபத்தில் ஒரு கலீக் ஒருத்தி ஹவாய்யில் போய் தேன் நிலவு கொண்டாடி வந்தாள். அவள் எந்தத்தீவுக்கு போனாள் என்று கேட்டேன், ஹவாய்யி என்கிற பெரிய தீவுக்குச் சென்று வந்ததாக சொன்னாள்.

  "சிவ சிவ" கோவில் ஒண்ணு அங்கேயிருக்குனும் இப்போத்தான் தெரிந்து கொண்டேன்.

  படங்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக திஷூ, அந்த அழகான பறவை, அந்த டால்ஃபின் உயிர்ப்பிக்கும் படங்கள். அனைத்துப் படங்களுமே உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், ஒரு படங்களைப் பார்க்கும்போது "லோண்லி ஃபீலிங்" எனக்கு வருது..வேறு மனிதர்கள் யாரையும் பேக் க்ரவ்ண்டில் படம்பிடிக்காததால் எனக்கு அப்படி தோனுதுனு நெனைக்கிறேன். கூட்டத்திலேயே பிறந்து வளர்ந்ததால் எனக்கு ஆளும் பேருமாக இருந்தால்தான் "ஐலாண்ட் ஃபீவர்" எல்லாம் வராமல் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Wheel well செய்தி மிகவும் ஆச்சரியமானது தான்.

   உங்கள் கலீக் ஹவாய்யி எனப்படும் பெரிய தீவுக்குச் சென்று இருப்பார்கள். குழந்தைகளுக்கு அங்கு குறைந்த ஆக்டிவிட்டீஸ் இருந்ததால் நாங்கள் குவாயி தேர்ந்தெடுத்தோம். எல்லா படங்களிலும் மனிதர்கள் இல்லாமல் போட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து தான் போட்டேன். எதற்கு அடுத்தவர்கள் ப்ரைவசியில் கை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் :‍)

   நன்றி வருண் உங்கள் வருகைக்கு!

   Delete
 6. ஹவா ஹவா யி பாடல் நினைவுக்கு வந்தது. உங்கள் விடுமுறை இனிதே கழிந்தது மகிழ்ச்சி தியானா..மிச்சம் இருக்கும் விடுமுறையும் இவ்வாறே கடக்க வேண்டும். அருமையான நாட்கள்.ஹவாய் படங்கள் வெகு அழகு.

  ReplyDelete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  பொழுது போகிறது!

  ReplyDelete
 8. படங்களும் பதிவும் மிக அழகாக உள்ளன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  நாளை முதல் வலைச்சர ஆசிரியர் ஆவதற்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வலைச்சரத்தின் மூலமாக உங்களது தளத்தை அறிந்தேன்....சிறந்த பகிர்வுகள்............

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost