
தீஷுவிற்கு இப்பொழுது வார்த்தையின் முதல் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரிகிறது. Cup என்றால் C என்ற எழுத்தில் தொடங்குகிறது என்பதை பொனிடிக்ஸ் படி கண்டுபிடித்து விடுகிறாள். ஆனால் முடியும் எழுத்தைச் சொல்லு என்றால், முடியும் எழுத்து என்றால் என்ன என்று புரியவில்லை. ஆகையால் Rhyming words விளையாண்டோம். நான் cat என்றால், rhyming word bat என்று சொல்ல வேண்டும். ஆனால் அவளுக்குப் புரியவில்லை. ஆகையால் rhyming words பத்து படங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். அதை வெட்டி, அவளை வரிசையாக ஒட்டச் சொன்னேன். படத்திற்கு நேராக அந்த வார்த்தைகளை எழுதச் சொன்னேன். நான் எடுத்துக் கொண்ட வார்த்தைகள் : cat, mat, hat, rat, ten, hen, pen, van, can, fan போன்றவை. எழுதின பேப்பரை புத்தக வடிவில் ஒட்டி, முதல் பக்கத்தில் அவள் பெயரை எழுத வைத்தேன். அந்த புத்தகம் அவளால் எழுதப்பட்டது போன்று இருக்கிறது. தினமும் எடுத்து வாசிப்பதால், Rhyming words பற்றியத் தெளிவு கிடைக்கும். தான் எழுதிய புத்தகம் என்ற பெருமையும் அவளுக்கு இருக்கிறது.
ஜலதரங்கம் செய்ய பயன்படுத்திய தண்ணீரை ஐஸ் டிரேயில் அவளை ஊற்றச் செய்திருந்தேன். ஐஸை எடுத்து, சுட வைத்து திரும்பவும் தண்ணீர் ஆவதைக் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் எதை ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு ஸ்பூனால் மாற்ற வேண்டும் என்றாள். அவள் விருப்பப்படி அதையே செய்தோம்.
வாங்கிய மளிகைப் பொருளை, பாக்கெட்டிலிருந்து பாட்டிலுக்கு மாற்றும் பொழுது, கீழே டிரே வைத்திருந்தால், டிரேயில் கொட்டியப் பொருளை, பாட்டிலுக்கு மாற்றுவது சற்று சிரமமானது. தட்டை பாட்டிலுக்கு நேராகத் திருப்பி கொட்ட வேண்டும். அதேப்போல் தட்டிலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு கற்களை மாற்றச் சொன்னேன். கல் என்பதாலும் தட்டு சிறிதாக இருந்ததாலும் எளிதாகச் செய்தாள். பெரிய டிரேயில், ரவை போன்றவற்றை சிறு வாயுள்ள பாத்திரத்திற்கு மாற்றுவது சிரமமானதாக இருக்கும் என நினைக்கிறேன். சில நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல முயற்சி! வாழ்த்துகள் தீஷூ :) எங்களுக்கு உங்கள் புத்தகத்தின் காபி கிடைக்குமா? :)
ReplyDeleteகலக்கல்! தீஷு அசத்துகிறாள்! நீங்களும்தான்!
ReplyDeleteநன்றி ஆகாய நதி. பொழிலனுக்கு இல்லாததா? கண்டிப்பா கிடைக்கும்..
ReplyDeleteநன்றி முல்லை..