வரைந்த கையை 3டியில் மாற்றியது தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதே மாதிரி வேறு ஏதாவது செய்யலாம் என்று இணையத்தில் தேடிய பொழுது இந்தத் தளம் கிடைத்தது. அதிலிருந்து டெம்பிளேட் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். அந்தத் தளத்தில் கொடுத்திருக்கும் செய்முறையை அப்படியே பின்பற்றினோம். அவர்களுக்கு வந்திருக்கும் எபெஃக்ட் எங்களுக்கு வரவில்லை. அந்த உருண்டைகள் 3டியாகத் தெரியவில்லை என்றதும் தீஷு சென்னாள், "ஒரு கண்ணை மூடிட்டுப் பாருங்க தெரியும்". எப்படி பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு 3டி எபெஃக்ட் தெரிகிறதா?
தீஷுவிற்கு கலர் செய்யத் தொடங்கிய சில நிமிடங்களில் ஆர்வம் போய் விட்டது. நானும் சேர்ந்து செய்தேன். கறும்பு நிறத்தில் ஆரம்பித்து, அது காலியாக ஊதாவில் தொடர்ந்தோம். அதே தளத்தில் க்யூப் (Cube) 3டி செய்ய வழிமுறை உள்ளது. தீஷுவிற்கு இது கடினம் என்று தோன்றியதால் நாங்கள் செய்யவில்லை. விரும்பமுள்ளவர்கள் முயன்று பார்த்துச் சொல்லுங்களேன்!!