மூன்று இலக்க எண்ணை ஒருவர் நினைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்பற்ற வேண்டும். மூன்று இலக்க எண்ணில் இருக்கும் அனைத்து எண்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 311, 121 போன்ற எண்களில் இரண்டு முறை 1 இருப்பதால் அந்த எண்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.
விளையாட்டு ஆரம்பிக்கும் முன்பே மூன்று வார்த்தைகள் (Code words) யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோட் வார்த்தைகள் வைத்து தான் பதில் சொல்ல வேண்டும். நான் எடுத்து இருக்கும் மூன்று கோட் வார்த்தைகள் பேனா, பென்சில் மற்றும் புத்தகம். அதன் விளக்கங்கள் வருமாறு :
பேனா - சொன்னதில் ஒரு எண்ணும் நினைத்ததில் இல்லை
பென்சில் - சொன்னதில் ஒரு எண் உண்டு ஆனால் சரியான இடத்தில் இல்லை
புத்தகம் - சொன்னதில் ஒரு எண் சரியான இலக்கத்தில்(இடத்தில்) இருக்கிறது
எண்ணை கண்டுபிடிப்பவர் சொல்லும் எண்ணில் நாம் நினைத்த எந்த எண்ணும் எந்த இலக்கத்திலும் இல்லை என்றால் பேனா என்று சொல்ல வேண்டும். இதன் மூலம் அந்த மூன்று எண்களும் நினைத்த எண்ணில் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். ஒரு எண் சரியான இடத்திலும் மற்றுமோர் எண் தப்பான இடத்தில் இருந்தால் பேனா பென்சில் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும்.
உதாரணம்
183 என்ற எண்ணை நினைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
முதல் யூகம் : 675
பதில் : பேனா
(6, 7, 5 என்ற எண்கள் எந்த இடத்திலும் இல்லை. மீதம் உள்ள எண்கள் 0, 1, 2, 3, 4, 8, 9)
இரண்டாவது யூகம் : 128
பதில் : பென்சில் புத்தகம்
(எண் 1 சரியான எண் சரியான இடத்தில் இருக்கிறது. அதனால் புத்தகம். எண் 8 சரியான இடத்தில் இல்லை என்பதால் பென்சில்). யூகிப்பவருக்கு ஒரு எண் சரியான இடத்தில் இருப்பது தெரியும். ஆனால் அது ஒன்றா அல்லது இரண்டா அல்லது எட்டா என்று தெரியாது
மூன்றாவது யூகம் : 194
பதில் : புத்தகம்
இப்பொழுது எண் 1 சரியான இடத்தில் இருப்பது தெரிந்து விட்டது. மீண்டும் இரண்டாவது யூக அடிப்படையில் எண் இரண்டா அல்லது எட்டா என்று கண்டுபிடிக்க வேண்டும்
நான்றாவது யுகம் : 124
பதில் : புத்தகம்
எண் 1 சரி, எண் 2 இல்லை.ஆகையால் எண் எட்டாக இருக்க வேண்டும். இரண்டாம் யூக அடிப்படையில் 8 சரியான இடத்தில் இல்லை. ஆகையால் எண் 18 என்று இருக்கும் என்று கண்டுபிடித்து விட்டோம். மூன்றாம் மற்றும் நான்காம் யூகங்களில் அடிப்படையில் 2, 4 எண்களும் நினைத்திருக்கும் எண்ணில் இல்லை என்று கண்டுபிடித்திருப்போம்.
ஐந்தாவது யூகம் : 189
பதில் : புத்தகம், புத்தகம்
இப்பொழுது எண் 9 தவறு என்பதால் மூன்றாக இருக்க வேண்டும்.
ஆறாவது யூகம் : 183
பதில் : புத்தகம், புத்தகம், புத்தகம்
கோட் வார்த்தைகளை ஒரு முறை முடிவு செய்து விட்டால் மாற்ற வேண்டாம். அடிக்கடி மாற்றினால் குழப்பமாக இருக்கும். புரியும் படி விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.