Slight words பற்றி எழுதியிருந்தேன். வார்த்தைகளை காண்பித்தும், அவற்றைக் கொண்டு சில விளையாட்டுகள் விளையாண்டும் 16 வார்த்தைகள் கற்றுக் கொண்டாள். அந்த 16 வார்த்தைகளையும் சில புத்தகங்களில் கண்டுபிடிக்கவும் செய்கிறாள். அதனால் அவற்றைக் கொண்டு வாக்கியங்கள் அமைத்து புத்தகமாக செய்து வாசிக்கப் பழக்கலாம் என்று நினைத்தேன். சில தளங்களில் தேடிப்பார்த்தேன். கிடைத்த அனைத்து புத்தகங்களிலும் அதிக வார்த்தைகள் இருந்தன. இல்லையேல் தீஷுவிற்கு தெரிந்த வார்த்தைகள் இல்லை. ஆகையால் நானே புத்தகம் மாதிரி ஒன்றை செய்து விட்டேன். நான் செய்த "புத்தகம் மாதிரி ஒன்று" வேண்டுமென்றால் இங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம்
தீஷுவிற்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் கூட உருவாக்க முடியவில்லை. ஆகையால் அவளுக்குத் தெரியாத வார்த்தைகளுக்கு பதில் படங்கள் வைத்து விட்டேன். உதாரணத்திற்கு என்பதற்கு an ant என்ற வார்த்தைக்கு antக்கு படம். இவ்வாறாக இரண்டு வார்த்தைகள், மூன்று வார்த்தைகள், நான்கு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் உருவாக்கி புத்தகம் தயாரித்து இருந்தேன்.
தீஷுவிற்கு பிடித்திருந்தது. அவளே புத்தகம் வாசித்ததில் அவளுக்கு மிகவும் சந்தோஷம். இந்த மாதிரி புத்தகங்களினால் குழந்தைகளுக்கு சில நன்மைகள் :
1. இடமிருந்து வலம் படிக்க பழகுதல்
2. எழுத்துகள் வார்த்தைகளாவது அறிதல்
3. வார்த்தைகள் வாக்கியங்களாவது அறிதல்
4. இடைவெளிகள் பார்த்தவுடன் வார்த்தைகள் முடிந்து விட்டது என அறிதல்
மிகவும் முக்கியமானது இம்மாதிரி புத்தகங்கள் அளிக்கும் தன்னம்பிக்கை. தன்னால் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை. படித்து முடித்தவுடன் தீஷுவின் முகத்தில் பார்த்த புன்னகை அவள் நம்பிக்கையைச் சொன்னது.
Games to play with 3 year old without anything
2 years ago
புத்தக மாதிரி நன்றாக இருந்தது.
ReplyDeleteமிகவும் முக்கியமானது இம்மாதிரி புத்தகங்கள் அளிக்கும் தன்னம்பிக்கை. தன்னால் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை. //
இந்த வாக்கியங்களை படிக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஆல் தி பெஸ்ட் தீஷு
நல்ல ஐடியா
ReplyDelete