தீஷுவிற்கு பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். பரமேஸ்வரி ஆண்டி போல் வீடு சுத்தம் செய்ய வேண்டும், அம்மா போல் பூரி மாவு பிசையவும், வட்டங்களாக தேய்க்க வேண்டும், அப்பா போல் ஷு பாலிஷ் போட வேண்டும். வீடு சுத்தம் செய்யும் முன் "அம்மா கிட்சன் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.. துடைக்கிறேன்" என்று அவள் அளவுக்கு ஒரு கப்பும், அவளுக்கு பெயிண்டிங் பிரெஷ் துடைக்கக் கொடுத்த துணியையும் எடுத்துக் கொண்டு ஆரம்பித்து விட்டாள். தண்ணீரை ஒரு கிண்ணத்திலிருந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் பிழிவதை ஒரு செய்முறையாக கொடுத்தேன் விரல்களை வலுப்படுத்தும் என்பதற்காக. ஆனால் சுத்தம் செய்வதில் தான் எத்தனை செயல்முறைகள் உள்ளன. கிண்ணத்தில் துணியை அமிழ்த்தி, பிழிந்து, தேய்த்து.. அனைத்தும் கைகளும் கைவிரல்களும் பயிற்சி..
மாவு பிசையும் பொழுது தானும் என்னுடன் செய்யத் தொடங்கினாள். அவளும் ஒரு சிறிய உருண்டை செய்து வைத்து விட்டாள். வட்டம் இடும் பொழுதும், அவளுடைய பொருட்களை வைத்து வட்டம் செய்து, அவள் செய்த பூரிகளை மட்டுமே சாப்பிட்டாள்.
வாழ்த்துகள்
ReplyDeleteஇது தான் உண்மையான வீட்டுப் பாடமோ :))
ReplyDeleteஆகா...தீஷு கலக்கறாங்க :-)
ReplyDelete