Sunday, October 25, 2009

வகுப்பறை

கிரஹப்பிரவேசத்திற்குப் போயிருந்தோம். அங்கு தீஷுவிற்கு ஒரு டப்பா கொடுத்தார்கள். தீஷுவிற்கு ஒரே சந்தோஷம் மற்றும் சந்தேகம் - திரும்பவும் வாங்கிவிடுவார்களா என்று. என்னிடம் வந்து, "இது நமக்குத்தானா இல்ல திரும்ப கொடுக்கனுமா" என்றாள். நமக்குத்தான் என்றவுடன் சந்தோஷம். "இத வச்சி டாலுக்கு Game சொல்லிக் கொடுக்கப் போகிறேன்" என்றாள். ஆஹா!! என் பொண்ணும் என்ன மாதிரியே ஆரம்பிச்சிட்டாளே என்று எனக்கு சந்தோஷம்.

வீட்டிற்கு வந்தவுடன், ஆரம்பித்து விட்டாள். நான் அப்பா மற்றும் ஒரு Bear மாணவர்கள். ஆளுக்கு ஒரு Blind Fold கொண்டு வந்து கொடுத்தாள். அந்த டப்பாவில், இரு வகையான பொருட்கள் வைத்து விட்டாள். ஒன்று மண்ணிலான பூந்தொட்டி போன்று miniatures மற்றொன்று மரத்திலான சிறிய படங்கள். அவள் விளையாட்டுப் பொருட்களிலிருந்து, இரண்டு வகை கிண்ணங்கள் எடுத்து வந்தாள். இரண்டு வகைப் பொருட்களில் ஒன்றை எடுத்து அப்பா கையில் கொடுத்து, "Touch and Tell, what is this?", என்றாள். அப்பாவும், "It is the small one".. "Keep it in the small cup" என்றாள். அடுத்து என்னிடம், "what is this?" என்றாள். "It is big" என்றேன். "Keep it in the big cup" என்றாள்.

முடித்தவுடன், எதையோ போய் எடுக்கச் சென்றாள். போகும் முன், "Do not touch these things..I will not send you home" என்றாள். அவள் சென்றவுடன், நான் அப்பாவுடன் ஏதோ சிரித்து பேச, "Why are you smilling?" get up.. go stand in the corner ".. கார்னரில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, "Want to go home" என்றாள். ஆமாம் என்றவுடன், "ok come"..

தூக்கத்திலிருந்த நான், முடிக்க வேண்டும் என்று, "Aunty, van has come.. Can I go now?" என்றேன். "ok.. go" என்று இரண்டு விநாடிகளில், "Ok.. tomorrow has come..come now" என்றாள். சிரித்து மலுப்பி, முடித்து விட்டோம்.

வெகு நாட்கள் கழித்து, punishment வாங்கி நின்றது முதல் அவளாகவே யோசித்து, அடுத்தவர்களுக்கு ஆக்டிவிட்டீஸ் சொல்லிக் கொடுத்தது வரை அனைத்தும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இது என்னுடைய இரு நூறாவது பதிவு. இதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த தருணத்தைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

3 comments:

  1. ஆன்ட்டிகியாட்டாங்களா..:-)) குட்டீஸ் உலகம்!!

    ReplyDelete
  2. நூறுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தூக்கத்திலிருந்த நான், முடிக்க வேண்டும் என்று, "Aunty, van has come.. Can I go now?" என்றேன். "ok.. go" என்று இரண்டு விநாடிகளில், "Ok.. tomorrow has come..come now" என்றாள். சிரித்து மலுப்பி, முடித்து விட்டோம். //

    ஹாஹாஹா.... குழந்தை உங்களை விட அறிவாளி. :)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost