Monday, July 20, 2009

கவர்ந்த தருணங்கள் 21/07/09

1.

தீஷு பள்ளி கிளம்பும் முன் என்னிடம்
தீஷு : "பனானா பாஃக்ல வச்சிட்டியா?"
அப்பா : "இதெல்லாம் கேளு.. புக் எடுத்து வச்சிட்டியானு கேட்டியா?"
தீஷு : "புக்கெல்லாம் சாப்பிட முடியாது..."

2.

தீஷு : "அம்மா, பால் குடிக்க கொடுங்க"
அம்மா: " குடுத்தப்ப குடிக்கல..இப்ப எதுக்கு?"
தீஷு : "இப்பத்தான் பால் தாகமா இருக்கு"

3.

தீஷு : "அம்மா, பல் கூசுது"
அம்மா: "இங்க வா, பாப்போம்"
தீஷு : "அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட் சாப்பிட்டா சரியா போயிடும்"

4.

தீஷு அழுது கொண்டே எழுந்தாள். கோலத்த அழிச்சியா என்றாள். இல்லையென்றவுடன் அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவள் அப்பாவிடம் "அம்மா ரப்பர் வச்சு கோலத்த அழிச்ச மாதிரி நான் தூங்கிறப்ப என் கண்ணுக்குள்ள தெரிஞ்சிச்சு, அதான் அழுதேன்" என்றாள். எங்களிடம் சொன்ன முதல் கனவு இது.

5.

தீஷு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது பாடிய வரிகள் ( Where is thumbkin? பாட்டு மெட்டில்)

சுத்தி சுத்தி ஓடி வாடா
தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கோடா
இங்க அங்க ஓடாத
இங்கேயே நில்லு.

13 comments:

  1. மிகவும் ரசித்தேன்..தியானா! //"அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட் சாப்பிட்டா சரியா போயிடும்//

    ஹஹ்ஹ்ஹா!!

    ஒரு கவிஞர் ரெடி ஆகிட்டார் போல இருக்கே! :-)

    ReplyDelete
  2. 1st பதில் கலக்கலோ கலக்கல்:):):)

    ReplyDelete
  3. //புக்கெல்லாம் சாப்பிட முடியாது...//

    ஆவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. //தீஷு பள்ளி கிளம்பும் முன் என்னிடம்
    தீஷு : "பனானா பாஃக்ல வச்சிட்டியா?"
    அப்பா : "இதெல்லாம் கேளு.. புக் எடுத்து வச்சிட்டியானு கேட்டியா?"
    தீஷு : "புக்கெல்லாம் சாப்பிட முடியாது..."//

    செம்ம கலக்கல்! :)))

    ReplyDelete
  5. /அம்மா, பல் கூசுது"//

    எனக்கும் பல் கூசுது. சாக்லெட் சாப்ட்டா சரியாயிடும்னு நினைச்சுக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  6. //தீஷு : "அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட் சாப்பிட்டா சரியா போயிடும்"// நல்ல பொண்ணு, சாக்லேட் சாப்பிட்டா சரியா போய்டும்னு சொல்ல வில்லை ல .

    ReplyDelete
  7. //இப்பத்தான் பால் தாகமா இருக்கு

    :))

    ReplyDelete
  8. நன்றி முல்லை.

    நன்றி rapp

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி சென்ஷி

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி சுந்தர்

    நன்றி karthik

    ReplyDelete
  9. Deekshu rombha chutti-nga....I was laughing for her innocent talk:-))

    ReplyDelete
  10. அட்டகாசம் போங்க...தீஷுவுக்க்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost