Monday, December 15, 2008

மார்கழி

நான் தீஷுவைப் பற்றி எழுதுவதற்காகவே இந்த ப்ளாக் உபயோகிறேன். ஆனால் அமித்து அம்மாவின் இந்த பதிவைப் பார்த்தவுடன், மார்கழியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

திருமணத்திற்கு முன் மார்கழியில் பால், பாலினால் ஆன பொருட்கள், பூ, மை போன்றவற்றை உபயோகப்படுத்த மாட்டோம். தினமும் திருப்பாவை படிப்பது, அதிகாலை கோயிலுக்குப் போவது உண்டு. என் பிறப்பு, படிப்பு எல்லாம் மதுரையில் தான். வேலைக்காக பெங்களூர் சென்றேன். பெங்களூரிலும் மார்கழியில் காலையில் கேயில் செல்லும் பழக்கம் இருந்தது.

ஒரு நாள் கோயிலில் முதல் நாள் யாகம் முடிந்திருந்த குண்டத்திலிருந்து எல்லோரும் விபூதி, தானியம் முதலியவற்றை எடுத்துக் கொண்டுயிருந்தனர். நானும் போய் எடுக்கும் பொழுது, எனக்கு யாகத்தில் போட்ட காசு கிடைத்தது. மூன்று இரண்டு ரூபாய்கள் ஒட்டிக்கொண்டு ஆறு ரூபாய். நான் எடுத்தவுடன் பக்கத்திலிருந்த அம்மா, காசு கிடைச்சிருக்கு என்று சத்தமாக சொன்னார்கள். உடனே பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் ஆண்டாள் கொடுத்தது, இந்த வருடம் திருமணம் ஆகும் என்றார்கள். அதே போல் எனக்கு அந்த வருடமே திருமணம் ஆனது. அத்தனை பேர் எடுக்கும் பொழுது, எனக்கு மட்டும் காசு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.

என் கணவரும் திருமாலின் ஒரு அவதாரமான ஸ்ரீராமர் (பெயரும் தான்). பிறந்ததும் ஸ்ரீராம நவமியில் தான். Just a coincidence ?

6 comments:

  1. என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்.

    ம், இப்போ அங்க மார்கழியெல்லாம் அனுபவிக்க முடியாது இல்லையா.

    ReplyDelete
  2. //மூன்று இரண்டு ரூபாய்கள் ஒட்டிக்கொண்டு ஆறு ரூபாய்..//

    எடுத்தத இரண்டு பேருக்கு குடுத்திருந்தா இன்னும் இரண்டு பேருக்கு கல்யாணம் ஆயிருக்குமில்ல.

    சும்மா......

    ReplyDelete
  3. நன்றி சந்தனமுல்லை.

    ஆமாம் அமிர்தவர்ஷினி அம்மா. அனுபவிக்க முடியாது. ஆனா விளக்கு ஏற்றி திருப்பாவை மட்டும் சொல்றேன்.

    கொடுத்திருக்கலாம் ஏகலைவன். ஆனா சுத்தி ஒரே பாட்டியா நின்னாங்க. எதுக்கு அவுங்களுக்குனு விட்டுடேன்.

    ReplyDelete
  4. Wow amazing Dhiyana :-) what a plesant coincidence illa? May be predestined ;-)

    ReplyDelete
  5. நான் நம்பும் ஆண்டாள் உங்களுக்கும் நல்ல துணைவரைக் கொடுத்திருப்பது தெரிந்து மகிழ்ந்தேன். 'சுற்றிவர ஒரே பாட்டியா நின்னாங்க'- ஹா..ஹா...!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost