Friday, November 14, 2008

டைம் பாஸ் விளையாட்டுக்கள்

எங்கள் வீட்டில் இப்பொழுது பிரபலமாக விளையாடப்படும் விளையாட்டுக்கள்.




1. பொருட்கள் கண்டுபிடித்தல் : ஏதாவது ஒரு கலர் சொல்லுவோம். அந்த கலரில் தீஷு ஏதாவது ஒரு பொருளைத் தொட்டு காட்ட வேண்டும்.




2. ABC விளையாட்டு : நாங்கள் A என்றால், தீஷு B என்று சொல்ல வேண்டும், அடுத்து நாங்கள் C என்று சொன்னவுடன், அவள் D என்று சொல்ல வேண்டும். இப்படியாக ஒன்று விட்டு ஒன்று சொல்லிக் கொண்டே வர வேண்டும்.




3.123 விளையாட்டு : இதுவும் ABC போல தான். ABC பதில் 123.




4. முத்த விளையாட்டு : தீஷுவின் கன்னத்தில் 1 அல்லது 2 அல்லது 3 முறை முத்தமிடுவேன். அதே அளவு அவள் திரும்ப என் கன்னத்தில் முத்தமிட வேண்டும். நான் முத்தமிடும் பொழுது எண்ண மாட்டேன். அவளாக மனதுக்குள் எண்ண வேண்டும். 3 முறைக்கு மேல் முத்தமிட்டால், defaultஆக 5 முத்தங்கள் தந்து விடுகிறாள்.






5. Clap விளையாட்டு : இதுவும் முத்த விளையாட்டு போல தான். முத்ததிற்கு பதில் கை தட்டுதல். நான் எத்தனை முறை கை தட்டுகிறேனோ, அத்தனை முறை தீஷுவும் பதிலிற்கு தட்ட வேண்டும்.





இந்த விளையாட்டுகள், தீஷுவால் மிகவும் விரும்பப்பட்டு, திரும்ப திரும்ப விளையாடப்படுகின்றன.

5 comments:

  1. அருமை அருமை - தீஷூ விளையாடும் விளையாட்டுகள் நானும் விளையாட வேண்டும் போல் இருக்கிறது. செல்லம் தீஷூவிற்கு நல்வாழ்த்துகள் - அன்பும் நல்லாசியும்

    ReplyDelete
  2. நல்லாருக்கு! க்ளாப்பிங்கும் நாங்களும் விளையாடுவோம்..அப்புறம் அதேபோல் விரல்களால் மறுகையில் தட்டவேண்டும்..அது மழை விளையாட்டு..ஒரு விரல் என்றால் தூரத்தில் மழை..மூன்று/நான்கு விரல்களால் என்றால் அருகில..கடைசியில் க்ளாப் என்றால் இடி!! :-))..i think pappu has crossed that stage now..so, இப்போது ராபிட்,புன்னி..ஒரு ராபிட் கூட ரெண்டு புண்ணி என்று..nice way to teach the numbers!!

    ReplyDelete
  3. நல்ல விளையாட்டுக்கள்.

    ReplyDelete
  4. நன்றி சீனா அவர்களே.


    மழை விளையாட்டு பத்தி சொல்லுங்க முல்லை. தீஷு கூட விளையாட usefulல இருக்கும்.

    நன்றி அமுதா.

    ReplyDelete
  5. நல்ல விளையாட்டுக்கள்.

    இங்க எப்ப வந்தாலும் நான் ஏதாவது கற்றுக்கொண்டு போவேன். இப்போதும் அதே.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost