C.B.S.C ஸிலபஸ் U.K.G கணிதப்புத்தகத்தில் நம்பர் லைன் (Number line) வைத்து கூட்டல், கழித்தல் செய்வது இருந்தது. நம்பர் லைன் என்பது ஸ்கேல் போன்று இருக்கும். ஒன்று, இரண்டு என்று வரிசையாக எழுதி இருக்கும். 3 + 2 என்று கூட்டல் செய்வதற்கு, முதல் எண் மூன்றிற்கு சென்று, பின் இரண்டாம் எண் இரண்டிற்கு இரண்டு எண்கள் முன்னால் சென்று 5 என்று விடை காணவேண்டும். தீஷுவிற்கு பேப்பரில் நம்பர் லைன் வைத்து செய்வதை விட குதிக்கும் ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டேன்.
தீஷுவை 0 முதல் 10 வரை வரிசையாக டைல்ஸ்ஸில்(தரையில்) எழுதச் சொன்னேன். 3 + 2 என்பதற்கு முதலில் 0விலிருந்து மூன்று முறை குதித்து மூன்றாம் எண் டைல்ஸ் சென்றாள். அடுத்து இரண்டு என்று சொன்னவுடன் இரண்டு முறை குதித்து 5 என்று விடை எழுதினாள். இவ்வாறு இரண்டு மூன்று முறை கூட்டல் செய்தவுடன், கழித்தல் செய்தோம். 9 - 3 என்றவுடன் ஒன்பதாம் எண்ணிற்கு சென்றாள். மைனஸ் மூன்று என்றவுடன், ஒரு நிமிடம் அவளாகவே யோசித்து பின்னால் வர வேண்டும் என்று கூறி விட்டு விடை கண்டுபிடித்தாள். கூட்டல் என்றால் என்ன, கழித்தல் என்றால் என்ன என்று அவளுக்குப் புரிந்து இருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி.
நம்பர் லைன் இவ்வாறு தரையில் எழுதி செய்ததில் வேகமாக சோர்வடைந்து விட்டாள். ஆனால் மிகவும் விருப்பமாக விளையாண்டாள்.
Games to play with 3 year old without anything
2 years ago