வீடு கட்டும் பொழுது, டைல்ஸ் தேர்ந்து எடுப்பதற்கு கொடுத்த புத்தகங்கள் இரண்டு மூன்று புத்தக அலமாரியில் இருந்தன. எதற்கு வைத்திருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. தூக்கிப் போடும் இவற்றைச் செய்தோம்.
ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய படமும், அதன் கீழே அந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த டைல்ஸுகளின் சிறிய படங்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. ஐந்து பெரிய படங்களையும், அந்த படங்களின் சிறிய அளவு டைல்ஸையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பெரிய படங்களை வரிசையாக தரையில் அடுக்கி வைத்துக் கொண்டோம். ஒவ்வொரு சிறிய படங்களாக எடுத்து அது எந்த பெரிய படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பொருத்தினோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்து மீண்டும் மீண்டும் விளையாண்டு கொண்டிருந்தாள்.
மற்றொரு புத்தகத்தில் இடை இடையே பெரிய அழகிய படங்கள் இருந்தன. அவற்றை 8 முதல் பத்து பஸில் பீஸாக வெட்டி கொண்டோம். வெட்டிய பகுதிகளை இணைத்து மீண்டும் பெரிய படம் உருவாக்க வேண்டும் (பஸில் போல).
தீஷு இரண்டு மூன்று நாட்கள் திரும்ப திரும்ப எடுத்து விளையாடி ஆச்சரியப்படுத்தினாள். இதேப் போல் பழைய காலெண்டர்களிலும் செய்யலாம்.
நல்ல ஐடியா....:-)
ReplyDeletevery good :-) I too have collected lots like this and one of my closet is full !!!!
ReplyDelete