தீஷுவிற்கு மண் அலர்ஜி. களிமண் தெரியவில்லை. மண்ணில் விளையாண்ட அதே நாளில் அவளுக்குக் கொம்பங்கள் வருவதால் களிமண் கொடுத்து சோதிக்க மனம் இருக்கவில்லை. கடையில் வாங்கிய Playdough சற்று நாட்களாகிவிட்டாலும் தீஷுவிற்கு அலர்ஜி உண்டாக்குகிறது. ஆகையால் வீட்டில் செய்வதே எங்களின் சாய்ஸ்.
களிமண் முன்பே செய்திருக்கிறோம். வெவ்வேறு கலரில் செய்ய வேண்டும் ஆனால் ஒரே தடவை மாவு பிசைவது போல் இருந்தால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று இணையத்திருந்து இந்த செய்முறை எடுத்தேன்.
தேவையானவை:
1 கப் கோதுமை மாவு / மைதா
1 கப் தண்ணீர்
சிறிது எண்ணெய்
Food colouring
கோதுமை மாவு, தண்ணீர், எண்ணெய் மூன்றையும் கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். கலவையை ஒரு தவாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரங்களில் ஒட்டாமல் வரும் பொழுது (கிட்டத்தட்ட ஒரிரு நிமிடங்கள் கழித்து), அடுப்பிலிருந்து எடுத்து, மாவை மிருதுவாக பிசைய வேண்டும். எங்களிடம் நான்கு கலர்கள் இருந்தன. மாவை ஐந்தாகப் பிரித்துக் கொண்டோம். கலரில் சிறிது தண்ணீர் ஊற்றி, மாவின் ஒரு பாகத்தில் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைய வேண்டும். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரெஞ்ச், கரும் பச்சை என ஐந்து கலர் உருண்டைகள் செய்தோம். இதுவரை இவ்வளவு மிருதுவான playdough செய்தது இல்லை.
தீஷு மனிதன், காரெட், கத்தரிக்காய், பாம்பு என இரண்டு மணி நேரம் செய்து கொண்டிருந்தாள். விளையாண்டு முடித்தவுடன் பழைய playdough டப்பாவின் போட்டு ஃப்ரிட்சில் வைத்து விட்டேன்.அன்று என்னிடம் காமெரா இல்லை. இன்று பத்து நாட்கள் ஆகி விட்டன. ஒரு நாள் மூன்று குழந்தைகள் அனைத்து கலர்களை கலந்து ஒரு மணி நேரம் விளையாண்டப்பின் சிறிதை கீழே போட்டுவிட்டேன். மீதமிருப்பது கீழே புகைப்படத்தில் உள்ளது.
மிருதுவாகவும் பல வண்ணங்களில் இருந்தாலும் இயற்கை களிமண்ணுக்கு ஈடாகாது என்பது என் எண்ணம்.
No comments:
Post a Comment