Wednesday, August 25, 2010

வார்த்தை விளையாட்டு

தீஷுவை ஏதாவது ஒரு வழியில் வாசிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். புத்தக்த்திலிருந்து மட்டுமே வாசிக்கச் சொன்னால் அவளுக்குச் சி(ப) ல நேரங்களில் விருப்பம் இருப்பதில்லை.

அவளே வாசிக்க வைக்க அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளையாட்டு போல் செய்தால் அவளுக்கு ஆர்வம் இருக்கிறது.

1. வார்த்தை பிங்கோ (Word Bingo) :

தீஷு டிக் டாக் டோ விளையாட‌ ப‌ழ‌கிய‌ப்பின் இதை ஆர‌ம்பித்தேன். 3*3 க‌ட்ட‌த்தில் ஒன்ப‌து வார்த்தைக‌ள் எழுதிக் கொண்டேன். நான் கூறும் வார்த்தை எழுதியிருந்த‌ ஒன்ப‌து வார்த்தைக‌ளில் இருந்தால், அந்த‌ வார்த்தை மேல் க‌ல்லை வைக்க‌ வேண்டும். எப்பொழுது ஒரு வ‌ரிசையாக‌ நிர‌ம்புகிற‌தோ அப்பொழுது நிறு‌த்த‌ வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் வார்தையைக் கண்டுபிடிக்க அவள் திரும்ப திரும்ப அந்த 9 வார்த்தைகளையும் வாசித்துக் கொண்டே இருக்கிறாள் :-))

2. கீழுள்ள வாக்கியங்கள் எடுத்துக் கொண்டேன்.

net is wet
see the sun
this is pig
dog sat on the log



ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு கலர் பேப்பரில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கலர் பேப்பர் கிடைக்க வில்லை. அதனால் வெள்ளை காகிதத்தில் வெவ்வேறு கலரில் எழுதினேன். ஒவ்வொரு வார்த்தையாக கிழித்துக் கொண்டேன். ஒரு கண்ணாடி கிண்ணத்தில் வைத்து விட்டேன். முதலில் தீஷு ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து கலர் அடிப்படையில் பிரிக்க வேண்டும். பின்பு ஒரு பிரிவில் இருக்கும் வார்த்தைகளை வாசித்து அவற்றை வரிசையாக அடுக்க வேண்டும். இதனால் வாசித்த மாதிரியும் ஆகி விட்டது. வார்த்தை உருவாக்க பழகிய மாதிரியும் ஆகிவிட்டது.

3. ஒரு கருப்பொருள் எடுத்துக்கொண்டோம். உதாரணத்திற்கு vegetable. அதன் கீழ் வரும் பொருட்கள் மட்டும் எழுத வேண்டும் - tomato, onion etc.. வார்த்தைகள் பெரிதாக இருந்தாலும் அவளுக்கு இரண்டு மூன்று எழுத்துகள் வாசித்ததும் கருப்பொருள் கொண்டு யூகிக்க முடிகிறது.

உங்கள் குழந்தைக்கு வாசிக்க எப்படி பழக்குனீர்கள்?

Tuesday, August 24, 2010

புகைப்ப‌ட‌க் க‌ண‌க்கு

தீஷு கதை சொல்லுவதற்காக அவளின் புகைப்படங்கள் அடிக்கடி எடுக்கிறோம்.

அப்பொழுது தீஷு உருவாக்கிய சில விளையாட்டுக்கள்.

1. புகைப்படத்திலிருந்த அவ‌ளின் அவள் வயதிற்கு ஏற்ப அடுக்கினாள். ஸ்மால் (small), லிட்டில் பிக் (little big), பிக் (big) என்று சொல்லச் சொன்னேன்.

2. புகைப்படங்களில் சில மாட் (matte finish) & சில கிலாசி (glossy finish) இருந்தன. அவற்றை rough and smooth என்று சொல்லிக் கொண்டு பிரித்தாள் (sorting). அவளே ஆசிரியையாகி எனக்கு எப்படி பிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்.

3. மாட் அதிகமாக இருக்கிறதா அல்லது கிலாசி அதிகமாக இருக்கிறதா என்று எண்ணி கண்டுபிடித்தாள்.

4. இரண்டையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து பாட்டன் உருவாக்கினாள்.

மொத்தத்தில் கதை சொல்ல எடுத்த படங்கள், கதைக்கு உதவாமல் கணிதத்திற்கு உதவின. அவளே இந்த விளையாட்டுக்களை உருவாக்கியது தான் எனக்குப் பிடித்திருந்தது.

Monday, August 16, 2010

நான்கு கோடு காகித‌ம்

தீஷுவிற்கு உடம்பில் சில கொப்பளங்கள் தோன்றின. டாக்டர் அலர்ஜி என்றார். முதலில் உணவையே யோசித்துக்கொண்டிருந்தோம். அப்பா தான் முதலில் கூறினார். அலர்ஜிக்குக் காரணம் மண் தட்டு. முதலில் நான் நம்பவில்லை. பின்பு ஒரு வாரம் மண் தட்டை உபயோகப்படுத்தமால் வைத்திருந்தோம். பின்பு தொட்டவுடன் அன்று இரவே உடம்பில் பல இடங்கள் கொப்பளங்கள். அதிலிருந்து மண்ணை உபயோகப்படுத்துவதில்லை. மண்ணில் எழுதிப் பழகுவதன் மூலம் பேப்பர் உபயோகத்தை சற்றே குறைக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்.

ஆக்டிவிட்டி ஸீட்ஸ் (activity sheets) திரும்ப திரும்ப பயன்படுத்த, அவற்றைத் தெளிவான காகிதத்தில் உள் வைத்து, white board marker கொண்டு எழுதி அழித்து இன்னும் அந்த maze புத்தகத்தைப் பயன்படுத்துகிறோம். இது போல் நான்கு கோடு நோட்டின் ஒரு பக்கத்தை ஒரு தெளிவான காகிதத்தினுள் வைத்து மார்க்கர் கொண்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் மார்க்கரின் நுனி சற்று தடிமனாக இருப்பதால் கோடுகளின் இடைவெளி அதிகமாக இருந்தால் தான் எழுத்துத் தெளிவாக வரும் என்பதால் நான்கு கோடு நோட்டு போல் கோடுக‌ள் ஒரு காகித‌த்தில் வ‌ரைந்து கொண்டேன். அதே காகிதத்தின் பின் பக்கத்தில் கட்டம் போட்ட காகிதம் போல் வரைந்திருக்கிறேன். வரைந்த பக்கத்தை ஒரு file லில் வைத்து விட்டு மார்க்கர் கொண்டு எழுதுகிறோம்.



தீஷு எழுதி பழக இது வசதியாக இருக்கிறது.

Thursday, August 12, 2010

படக் குறுக்கெழுத்து

சில விளையாட்டுகளை தீஷுவின் வயதிற்கு ஏற்ப அறிமுகப்படுத்த ஆரம்பித்து இருக்கிறேன். சொட்டான் கல் என்று சிறு வயதில் எனக்கு என் அம்மா வழி பாட்டு கல்லைத் தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவதற்கு சொல்லிக் கொடுத்தார்கள். பல்லாங்குழி விளையாட பழகிய அளவிற்கு என்னால் அதைப் பழக முடியவில்லை. கை கண் ஒருங்கிணைப்புக்கு மிகவும் ஏற்றது. தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பழகுவதற்கே எனக்குக் கஷ்டம்.. எங்க சொல்லிக் கொடுக்க ?அப்பா சொல்லிக் கொடுத்தார். முதலில் அம்மாவிற்கு பின்பு தீஷுவிற்கு. அம்மாவிற்கு இப்பவும் கஷ்டம்.. தீஷுவிற்கு கல்லைத் தூக்கிப்போடக்கூட முடியவில்லை. சில நாட்கள் கழித்து முயற்சிக்க வேண்டும்.



அடுத்து முயற்சித்தது குறுக்கெழுத்து. தீஷுவிற்கு க்ளூஸ் வாசிக்க கஷ்டம் என்பதால் படங்கள் ஒட்டிவிட்டேன். அதே போல் இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் போன்றவைக்கு அம்பு குறிகள். வெறும் நான்கு படங்கள். என்ன எழுத வேண்டும் என்று புரிந்தவுடன் ஏற்கெனவே எந்த எழுத்து இருக்கிறதோ அதை எழுத வேண்டாம் என்று புரிந்து இருக்கிறது. இந்த விளையாட்டு குறுக்கெழுத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

Tuesday, August 10, 2010

கதை சொல்லி

சென்ற வருடம் தீஷு பள்ளியிலிருந்து வந்திருந்த ஒரு கமெண்ட் அவள் பேச்சுத்திறமையையும் அடுத்தவரிடம் பழகும் தன்மையும் மேம்படுத்த வேண்டும். தீஷு அடுத்தவரிடம் பழகுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வாள். அடுத்தவரிடம் பழகும் வரை பதிலும் சொல்ல மாட்டாள். பள்ளியில் சொன்னது அவளை பேச வைத்துக் கொண்டே இருங்கள் - உங்களிடமோ மற்றவர்களிடமோ.

அவளைப் பேச வைக்க எங்கள் வாசிக்கும் நேரத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். what is the boy is doing, how is he feeling, happy or sad? என்பதைப் போன்றன. இன்று வரை எங்களின் அந்தப் பழக்கம் தொடர்கிறது.

அதைச் சற்று மேம்படுத்தி, செய்தித்தாளின் கூட வரும் கூடுதல் பேப்பரில் நல்ல தரமான படங்கள் வரும். அவற்றைப்பற்றி நான் கேள்வி கேட்க, அவள் பதில் கூறுவாள். what is the aunty doing? do you like her dress? where is she standing? போன்றன. சில நாட்களில் தீஷுவே படத்தைப் பார்த்து சில வார்த்தைகள் கூறத் தொடங்கினாள்.

இப்பொழுது தீஷுவிற்கு கதை சொல்லுவதற்கு விருப்பம் வந்திருக்கிறது. செய்தித்தாளின் படத்தைப் பார்த்து சொல்லச் சொன்னேன். அவளுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. அவளே அவள் கதையின் நாயகி ஆக்கினேன். அவளின் இரு வகை புகைப்படங்களை எடுத்துக் கொள்வேன். உதாரணத்திற்கு ஒன்றில் உட்கார்ந்து இருந்தால் மற்றொன்றில் நின்று கொண்டு இருப்பது. இரண்டையும் பார்த்து ஏதாவது சொல்ல வேண்டும்.




நேற்று இரண்டு படங்கள் கொடுத்தேன். ஒன்றில் ஒரு சிங்க பொம்மையைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள். மற்றொன்றில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்த மற்ற சிறு சிறு பொருட்களையும் எடுத்துக் கொண்டோம். தீஷு சொன்ன கதை -
Lion scared Dheekshitha and (she) cried. Amma was having a cup of coffee (ஒரு காபி கப் இருந்தது, அதையும் கதையில் இணைத்துக் கொண்டாள்) and came running. She told that this bird, camel, elephant and lion are only toys. Dheekshitha was happy.

அவளே அவள் கதையின் நாயகி என்பது அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குப்பிறகு மேலும் சில கேள்விகள் கேட்டு அவள் கதையை மெருகேத்த வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Monday, August 9, 2010

கலர் கார்பன் பேப்பர்

தீஷு கலர் செய்திருந்த பேப்பரில் பின் பக்கம் எழுதலாம் என்று அந்தப் பேப்பரை ஒரு நோட் புக் மீது வைத்து எழுதினோம். எழுதிய அனைத்தும் கீழே வைத்திருந்த நோட் புக்கில் எழுதி இருந்தது. தீஷு கலர் செய்து வைத்திருந்த பேப்ப‌ர், கலர் கார்பன் பேப்பர் போல அதன் மேல் எழுதிய அனைத்தையும் கீழே எழுதியிருந்தது.

தீஷுவிற்கு தான் எழுதியது கீழே வேறு ஒரு பேப்பரில் வேறு கலரில் வருவது பிடித்திருந்தது.



க‌ல‌ர் க‌ல‌ரான‌ கார்ப‌ன் பேப்ப‌ர் செய்ய‌லாம் என்று ஒரு பேப்பரில் கலர் கலராக செவ்வகம் செவ்வகமாக கலர் செய்து கொண்டோம். கலர் செய்த பக்கத்தை மற்றொரு காகிதத்தில் வைத்துக் கொண்டோம். பின்பு பின் பக்கத்தில் எழுதினோம். வரைந்தோம். கலர் கலராக கீழிருந்த பேப்பரில் வந்தது. அவள் பெயரை எழுதினோம். ஒரு கலரில் ஆரம்பித்த பெயர் மற்றொரு கலருக்கு மாறி மற்றொரு கலரில் முடிந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

Monday, August 2, 2010

டான்கிராம்ஸ்

டான்கிராம்ஸ் - அம்மாக்களின் வலைப்பதிவில் ஒரு முறை எழுதியிருக்கிறேன்.

தீஷுவிற்கு பழக்கலாம் என்று தோன்றியது. விதிமுறை மிகவும் எளியது. ஏழு காய்களை அல்லது டான்ஸ் இருக்கும். அனைத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். அனைத்து டான்ஸும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.




இதற்கு முன் நான் டான்கிராம்ஸ் விளையாண்டது இல்லை, சொல்லப்போனால் பார்த்ததுக்கூட இல்லை. க‌டையில் தேடிய‌ பொழுது,கிரேட்டிவ் பிராண்டு ட‌ப்பாவில் ஒரு ஸெட் டான்ஸும் , பிரான்க் (Frank) பிராண்டில் இரண்டு ஸெட்டு டான்ஸும் இருந்தன. இரண்டு ஸெட் இருந்தது வாங்கினோம். நான் எதிர்பார்த்ததை விட கடினமானதாக இருந்தது. நான் ஒர் இரு படங்கள் உருவாக்கிப் பழகிக்கொண்டிருந்தேன். அதைப்பார்த்தவுடன் தீஷுவிற்கு ஆசை வந்து விட்டது. என்னைப்பார்த்து செய்யத் தொடங்கினாள். ஆனால் மிகுந்த உதவி தேவைப்படுகிறது.


அவளாக சில படங்கள் உருவாக்கினாள். புத்தகத்திலிருந்து படங்கள் பார்த்து உருவாக்குவதற்கு அவளுக்கு மேலும் சில மாதங்கள் அல்லது வருடங்களாகலாம் என்று நினைக்கிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost