Sunday, February 21, 2010

கவர்ந்த தருணங்கள் 21/02/09

1. படுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஃபானில் இருந்த ஜன்னல் நிழலைப் பார்த்து,

தீஷு: அம்மா, அங்கப் பாரு ஜன்னல் reflection.

அம்மா : (ரூமில் இரண்டு ஜன்னல்கள் இருந்ததால்) எந்த ஜன்னலோட reflectionனு சொல்லுப் பார்க்கலாம்?

தீஷு : (சரியாக) அந்த ஜன்னலோடது

அம்மா : (ஆச்சரியமாக) எப்படிடா கரெக்டா சொன்ன?

தீஷு: வாயால தான்.

2. பக்கில் (Buckle) போட கற்றுக் கொடுக்க, தீஷுவின் பழைய உடையில் பக்கில் பகுதியை கிழித்து வைத்திருந்தேன். அதை தன் வாத்து பொம்மைக்கு உடை போல் போட விரும்பினாள். சிறு பகுதி மட்டுமே இருந்ததால் போட முடியாது என்றேன். அவள் "சும்மா போட்டு, அந்த கயிறை கட்டி விடு.." என்றாள். கட்டி விட்டவுடன் கீழ் பகுதி அவிழ்ந்து விடும் போல் இருந்தது.. இப்ப என்ன செய்வது என்பது போல் அவளைப் பார்த்தேன். "கீழ பின் போட்டு விடு" என்றாள். போட்டவுடன் அழகாக பொருந்தியது. அதைப்பார்த்தவுடன் தீஷுவிற்கு மிகுந்த சந்தோஷம்.. "இதத்தான் சொன்னேன்..போடலாமினு.. இதுக்குப் போய் பயந்துக்கிட்டு"..


3. "அம்மா, லாரி எப்படி ஓட்டணும்?"

"கார் மாதிரி தான்"

"ஓ.. கலெட்ச் பிடிச்சி, கியர் பிடிச்சி, பிரேக் பிடிச்சா ?"

4. தினமும் தீஷுவை பள்ளியில் விட்டு விட்டு அப்பா ஆபிஸ் போவார்..

"அப்பா, இன்னைக்கு கார்ல ஸ்கூலுக்குப் போகலாம்"

(டிராபிக்க்குப் பயந்த அப்பா) "டெய்லி கார்ல வந்தா ஆபிஸ்ல திட்டுவாங்கடா"

சற்றும் தாமதிக்காமல் "நீ என்னைய டிராப் பண்ணு, வீட்டு வா, தருணுடைய அவ்வாகிட்ட கீய வாங்கி, கதவ திறந்து, கார் கீய வச்சிட்டு, வண்டி கீய எடுத்துட்டு, கதவ மூடி, திறம்ப அவுங்கிடா கீய குடுத்துட்டு, நீ ஃபைக்கில ஆபிஸ் போ"

Thursday, February 11, 2010

நான் வாசிக்கிறேனே அம்மா..

Slight words ப‌ற்றி எழுதியிருந்தேன். வார்த்தைக‌ளை காண்பித்தும், அவ‌ற்றைக் கொண்டு சில‌ விளையாட்டுக‌ள் விளையாண்டும் 16 வார்த்தைக‌ள் க‌ற்றுக் கொண்டாள். அந்த‌ 16 வார்த்தைக‌ளையும் சில‌ புத்த‌க‌ங்க‌ளில் க‌ண்டுபிடிக்க‌வும் செய்கிறாள். அத‌னால் அவ‌ற்றைக் கொண்டு வாக்கிய‌ங்க‌ள் அமைத்து புத்த‌க‌மாக‌ செய்து வாசிக்க‌ப் ப‌ழ‌க்க‌லாம் என்று நினைத்தேன். சில‌ த‌ள‌ங்க‌ளில் தேடிப்பார்த்தேன். கிடைத்த‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளிலும் அதிக‌ வார்த்தைக‌ள் இருந்த‌ன‌. இல்லையேல் தீஷுவிற்கு தெரிந்த‌ வார்த்தைக‌ள் இல்லை. ஆகையால் நானே புத்த‌க‌ம் மாதிரி ஒன்றை செய்து விட்டேன். நான் செய்த‌ "புத்த‌க‌ம் மாதிரி ஒன்று" வேண்டுமென்றால் இங்கிருந்து எடுத்துக்கொள்ள‌லாம்

தீஷுவிற்கு தெரிந்த‌ வார்த்தைக‌ளை கொண்டு இர‌ண்டு வார்த்தைக‌ள் கொண்ட‌ வாக்கிய‌ங்க‌ள் கூட‌ உருவாக்க‌ முடிய‌வில்லை. ஆகையால் அவ‌ளுக்குத் தெரியாத‌ வார்த்தைக‌ளுக்கு ப‌தில் ப‌ட‌ங்க‌ள் வைத்து விட்டேன். உதார‌ண‌த்திற்கு என்ப‌த‌ற்கு an ant என்ற‌ வார்த்தைக்கு antக்கு ப‌ட‌ம். இவ்வாறாக‌ இர‌ண்டு வார்த்தைக‌ள், மூன்று வார்த்தைக‌ள், நான்கு வார்த்தைக‌ள் கொண்ட‌ வாக்கிய‌ங்க‌ள் உருவாக்கி புத்த‌க‌ம் த‌யாரித்து இருந்தேன்.

தீஷுவிற்கு பிடித்திருந்த‌து. அவ‌ளே புத்த‌க‌ம் வாசித்த‌தில் அவ‌ளுக்கு மிக‌வும் ச‌ந்தோஷ‌ம். இந்த‌ மாதிரி புத்த‌க‌ங்க‌ளினால் குழ‌ந்தைக‌ளுக்கு சில‌ ந‌ன்மைக‌ள் :

1. இட‌மிருந்து வ‌ல‌ம் ப‌டிக்க‌ ப‌ழ‌குத‌ல்
2. எழுத்துக‌ள் வார்த்தைக‌ளாவ‌து அறித‌ல்
3. வார்த்தைக‌ள் வாக்கிய‌ங்க‌ளாவ‌து அறித‌ல்
4. இடைவெளிக‌ள் பார்த்த‌வுட‌ன் வார்த்தைக‌ள் முடிந்து விட்ட‌து என‌ அறித‌ல்

மிக‌வும் முக்கிய‌மான‌து இம்மாதிரி புத்த‌க‌ங்க‌ள் அளிக்கும் த‌ன்ன‌ம்பிக்கை. த‌ன்னால் வாசிக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை. ப‌டித்து முடித்த‌வுட‌ன் தீஷுவின் முக‌த்தில் பார்த்த‌ புன்ன‌கை அவ‌ள் ந‌ம்பிக்கையைச் சொன்ன‌து.

Monday, February 8, 2010

ஒன்று மேல் ஒன்று கட்டி

மதிப்பு தெரியாமல் ஒன்று, இரண்டு என்று சொல்லித்தருவதில் எனக்கு விருப்பமிருப்பதில்லை. ஒன்றின் மதிப்பு, இரண்டின் மதிப்பு, ஒன்றுக்கும் இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு தான் ஐந்திற்கும் ஆறுக்குமுள்ள வித்தியாசம் முதலியன புரிய வேண்டும் என்பது என் விருப்பம்.



நிறைய விளையாட்டுக்கள் மூலம் கணித அடிப்படை பயின்று இருக்கிறோம். எண்ணும் அதன் மதிப்பும், spindle box, cards and counters 1, cards and counters 2, cuisenaire rods அவற்றில சில. தீஷு எப்பொழுதும் பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து ஆர்வமாக விளையாட மாட்டாள். பில்டிங் ப்ளாக்ஸிலுள்ள ஒரு கலர் மட்டும் எடுத்துக் கொண்டோம். ஒன்று, ஒன்றின் ஒன்று வைத்து இரண்டு, இரண்டின் மேல் ஒன்று வைத்து மூன்று என எட்டு ராடுகள் செய்து கொண்டோம். எட்டு ராடுகள் செய்யத்தான் ப்ளாக்ஸ் இருந்த்து. அதை வரிசையாக ஒன்று முதல் எட்டு வரை அடுக்கினோம், சிறியது எது பெரியது எது என்று கண்டுபிடித்தோம், 4 +2 = என கூட்டம் செய்தோம். தீஷு மிகவும் ஆர்வமாக ஒரு மணி நேரம் விளையாண்டாள்.
கணித அடிப்படை கற்பதுடன் கை கண் ஒருங்கிணைப்புக்கு ஏற்றது.

Wednesday, February 3, 2010

வீட்டுப் பாட‌ம்



தீஷுவிற்கு பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். பரமேஸ்வரி ஆண்டி போல் வீடு சுத்தம் செய்ய வேண்டும், அம்மா போல் பூரி மாவு பிசையவும், வட்டங்களாக தேய்க்க வேண்டும், அப்பா போல் ஷு பாலிஷ் போட வேண்டும். வீடு சுத்தம் செய்யும் முன் "அம்மா கிட்சன் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.. துடைக்கிறேன்" என்று அவள் அளவுக்கு ஒரு கப்பும், அவளுக்கு பெயிண்டிங் பிரெஷ் துடைக்கக் கொடுத்த துணியையும் எடுத்துக் கொண்டு ஆரம்பித்து விட்டாள். தண்ணீரை ஒரு கிண்ணத்திலிருந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் பிழிவதை ஒரு செய்முறையாக கொடுத்தேன் விரல்களை வலுப்படுத்தும் என்பதற்காக. ஆனால் சுத்தம் செய்வதில் தான் எத்தனை செயல்முறைகள் உள்ளன. கிண்ணத்தில் துணியை அமிழ்த்தி, பிழிந்து, தேய்த்து.. அனைத்தும் கைகளும் கைவிரல்களும் பயிற்சி..



மாவு பிசையும் பொழுது தானும் என்னுட‌ன் செய்ய‌த் தொடங்கினாள். அவ‌ளும் ஒரு சிறிய‌ உருண்டை செய்து வைத்து விட்டாள். வட்ட‌ம் இடும் பொழுதும், அவளுடைய‌ பொருட்க‌ளை வைத்து வ‌ட்ட‌ம் செய்து, அவ‌ள் செய்த‌ பூரிக‌ளை ம‌ட்டுமே சாப்பிட்டாள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost