1. இருவரும் விளையாண்டோம். சோழிகளை இருவரும் பிரித்துக் கொண்டோம். தாயக்கட்டை உருட்டி, அந்த எண்ணிற்கு மற்றவரிடமிருந்து சோழிகள் வாங்க வேண்டும். முதலில் நான் தாயக்கட்டையை உருட்டினேன். பின்பு தீஷுவிடம்,
" Can you please give me (that many number )"
கொடுத்தவுடன்
"Thanks"
என்றேன். பின்பு அவள் முறை..
இதன் மூலம் எண்ணுதல் (தாயக்கட்டையில் புள்ளிகள் மற்றும் கொடுப்பதற்கு சோழிகள்), பிறரிடம் எப்படி கேட்க வேண்டும் என்ற courtesy மற்றும் முறை எடுத்து விளையாடுவது முதலியன கற்றுக் கொள்ளலாம்.
2. Patterns : ஒரு சோழி கவிழ்த்தும், மற்றொன்றை விரித்தும் மாறி மாறி வைத்துக் கொண்டே வர வேண்டும். மற்ற பொருட்கள் கொண்டு நாங்கள் பல முறை விளையாண்ட விளையாட்டு.
3. இது நான் சிறு குழந்தையாக இருந்த பொழுது விளையாடியது. சோழிகளை குவியலாக போட்டு, மற்ற சோழிகளுடன் இடிக்காமல் ஒவ்வொரு சோழியாக எடுக்க வேண்டும். தீஷு மிகவும் விருப்பமாக விளையாண்டாள். இது கவன ஒருங்கினைப்புக்கும், விரலுக்கும் ஏற்ற பயிற்சி ஆகும்
இந்த விளையாட்டு எல்லாம் இப்ப மறந்து விட்டது...
ReplyDelete