Monday, November 18, 2013

வெற்றி பெற்றவை

குக்கர் மூடியில் வெயிட் போடுதல் 



சிறு துளையின் வழியே பென்சிலை உள்ளே போடுதல். இது சம்முவின் ஃபேவரைட். ஓரே நேரத்தில் பத்து பென்சில் வரை போடுகிறாள். 



பாட்டிலை மூடுதல். இன்னும் மூடத் தெரியாது. ஆனால் மூடியை மேலே வைக்கத் தெரிகிறது. 



வடிவங்களின் பெயர்கள் தெரிவதால், நான் கேட்கும் வடிவத்தை பையிலிருந்து எடுத்து டப்பாவில் போடுதல்


டூத் பிக்கை எண்ணெய்க் கரண்டியின் துளைகளின் போட வேண்டும். வயதிற்கு அதிகமோ என்று யோசித்தேன். ஆனால் விருப்பமாக செய்தாள். பொதுவாக சம்முவுடன் விளையாடும் பொழுது போன் போன்ற அவசரத்திற்கு கூட எழுந்திருக்க யோசிப்பேன். டூத் பிக் சற்று கூர்மையாக இருந்ததால் ஒவ்வொரு வினாடியும் கவனம் அவள் மீதே வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது. 





நான் முன்பே சொன்னது போல இவை அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு மேல் செய்ததால் வெற்றி பெற்றவை. :))

7 comments:


  1. உங்க மைண்ட வேலை செஞ்சுகிட்டே இருக்குமோ அதுக்கு ரெஸ்ட்டே இருக்காதோ? நல்ல முயற்சிகள்... பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. ஒரு நிமிடத்தில் நல்ல பயிற்சி...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக அருமை தியானா..பல்குத்தும் குச்சி மிக மிகப் பிடித்தது :) உன் கற்பனைத் திறனுக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
  4. mika nalla tips.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  5. எளிதான அதே சமயம் குழந்தைகளின் கைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விளையாட்டுகள்... இல்லையா தியானா!

    ReplyDelete
  6. வருகை தந்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்!!

    ReplyDelete
  7. பயிற்சிகள் அனைத்தும் நன்று. தொடரட்டும்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost