Wednesday, July 11, 2012

ச‌ர்க்க‌ரை பாகு பெயிண்டிங்

சர்க்கரையை த‌ண்ணீரில் க‌ரைத்து பாகு செய்து, அத‌னைக் கொண்டு பெயிண்டிங் முய‌ற்சித்தோம்.

இர‌ண்டு டீ ஸ்பூன் ச‌ர்க்கரையுட‌ன் (மிக‌வும் சிறிய‌ அள‌வில் போதும்) இர‌ண்டு டீ ஸ்பூன் த‌ண்ணீர் சேர்த்து, ஒரு சில நொடிக‌ள் அடுப்பில் வைத்தோம். ச‌ர்க்கரை க‌ரைந்து த‌ண்ணீர் சிறிது க‌ட்டியான‌வுட‌ன், அடுப்பிலிருந்து எடுத்து ஆற‌விட்டோம். பாகு ரெடி. மிக‌ சிறிது அள‌வு பாகு இருந்தால் போதும்.

பெயிண்டிங் செய்வ‌த‌ற்கு,

1. க‌றுப்பு க‌ரையான் (Black Crayon) கொண்டு ஒரு பட‌ம் வ‌ரைந்து கொண்டோம்.

2. பாகில் சிறிது அள‌வு எடுத்து ஒரு சொட்டு ஃபுட் க‌ல‌ரிங் க‌ல‌ந்து கொண்டோம்

3. காதில் அழுக்கு எடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் பட்ஸ் (cotton buds) கொண்டு க‌ல‌ர் செய்தோம்.


4. முழு காகித‌த்தையும் க‌ல‌ர் செய்ய மிக‌ குறைந்த அள‌விலேயே‌ பாகு தேவைப்ப‌ட்ட‌து.


மிக‌ அழ‌கான‌ பெயிண்டிங் இப்பொழுது எங்க‌ள் வ‌ர‌வேற்ப‌ரையை அல‌ங்க‌ரித்துக் கொண்டிருக்கிற‌து.




7 comments:

  1. மிக அழகாக உள்ளது - எறும்புகள் படையெடுக்காமல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  2. அழகாக இருக்கிறது தியானா! welcome back to your blog :-)

    ReplyDelete
  3. Thanks Karthik, Grace, Sunitha

    ReplyDelete
  4. அன்பின் தீஷு - கை வேலை அருமை - கற்பனையும் அம்மா கற்றுக் கொடுத்ததும் சர்க்கரைப் பாகு பெயிண்டிங்கினை அழகாக ஆக்கி இருகின்றன. வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. நன்றி சீனா அய்யா..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost