என் அம்மா வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த வெத்தலை பெட்டியை எடுத்துக் கொண்டோம். கண்ணாடி கற்களை ஒவ்வொரு இரண்டடி தூரத்திற்கு ஒன்றாக வைத்திருந்தேன். கண்ணாடி கற்கள் அல்ல அவை. அவை தீஷுவின் பொம்மைகளின் உணவு. தீஷுவும் பொம்மைகளுக்கு உணவு எடுப்பதற்காக பறந்து பறந்து ஒவ்வொரு கண்ணாடி கற்களாக எடுத்து பெட்டிக்குள் வைத்துக் கொண்டே வந்தாள். கண்ணாடி கற்கள் எடுக்கும் பொழுது ஒவ்வொன்றாக கூட்ட வேண்டும். பெட்டியில் கற்கள் அதிகமாயின. அவள் எடுப்பதற்காக 10 கற்கள் அவ்வாறு வைத்திருந்தேன். அனைத்தையும் எடுத்து வந்தப்பின், வரும் வழியில் ஒரு நாய் பொம்மை அவளிடம் உணவு கேட்கும், தீஷுவும் கொடுப்பாள். ஒரு உணவு குறைந்தது. இப்பொழுது ரிவர்ஸ் கவுண்ட்டிங் ஆரம்பம். அவளிடமிருந்த உணவு குறைய ஆரம்பித்தது. கழித்தல் மற்றும் மைனஸ் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தேன். இவ்வாறு அவள் எடுத்த உணவில் 8 பேருக்குக் கொடுத்து விட்டு, இரண்டு தன் இரண்டு பொம்மைகளுக்கு எடுத்துச் சொன்றாள்.
பொதுவாக கூட்டல் கற்கும் பொழுது, முதல் எண்ணுக்கு நேராக, அதன் மதிப்புக்கு கோடோ அல்லது வட்டமோ வரைந்து, இரண்டாவது எண்ணுக்கு நேராக, அதன் மதிப்புக்கு கோடோ அல்லது வட்டமோ வரைந்து கூட்டும் பொழுது அனைத்து கோடுகளையும் கூட்டி விடை எழுதுவோம். கழிக்கும் பொழுது முதல் எண்ணின் கோடுகளை இரண்டாவது எண்ணின் கோடுகள் அளவு அடித்து விட்டு விடை எழுதுவோம்.
நானும் தீஷுவும் கூட்டல் வெவ்வேறு முறையில் முன்பே செய்திருக்கிறோம். இங்கும், இங்கும் காணலாம். கழித்தல் கற்றது பற்றி இங்கே காணலாம். ஒரளவு கூட்டல் என்றால் என்ன என்பதை தீஷு புரிந்து கொண்டப்பின் எப்பொழுதும் கற்கும் கோடுகள் முறையில் சொல்லிக் கொடுத்தேன். ஒவ்வொரு கோடாக போடுவதில் அவளுக்கு அதிக நேரம் எடுத்தது. அவள் வேகத்தை அதிகரிக்க, கூட்டல் கணக்கில் இருக்கும் முதல் எண்ணை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது எண்ணை விரல்களில் வைக்க வேண்டும். மனதிலுள்ள எண்ணிற்கு அடுத்த எண்ணிலிருந்து விரல்களை எண்ண வேண்டும். தீஷுவிற்கு இது எளிதாக இருந்தது.
அதேப் போல் கழித்தல் செய்யும் பொழுது மனதிலுள்ள எண்ணிற்கு முந்திய எண்ணிலிருந்து ரிவர்ஸ் கவுண்ட்டிங் செய்ய வேண்டும். தீஷுவும் செய்கிறாள். ஆனால் கூட்டலுக்கு ஏன் அதிகப்படுத்துகிறோம் என்றும் கழித்தலுக்கு ஏன் குறைக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்ததா என்று எனக்கு ஒர் எண்ணம். அதற்காகத் தான் இந்த விளையாட்டை விளையாண்டோம்.
மீண்டும் ஒரு முறை விளையாட வேண்டும் என்று பிரியப்பட்டு விளையாண்டாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
அட நல்லாருக்கே
ReplyDelete