1. தீஷு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் அவள் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு வளைவில் ஒரு கார் மிகவும் மெதுவாக திரும்பியது. உடனே தீஷு, "கார் ஏன் இவ்வளவு ஸ்லோவா போகுது? L போர்டா என்ன?"
2. என் கஸின் CAT ட்டில் நல்ல சதவிகிதம் பெற்றிருந்தும், எந்த நல்ல காலேஜிலும் இடம் கிடைக்காது என்றதை என் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே தீஷு, "அம்மா, CAT ஈஸி தானே.. C-A-T னு எழுதி காலேஜில சேர்ந்திட வேண்டியது தானே"
3. பால் பாத்திரத்தில் பால் காய்ச்சியவுடன் ஏற்பட்ட கறுப்பு புள்ளியைக் காட்டி "ஏன் பாக்யா பாட்டி நல்லா க்ளீன் பண்ணல"
"அப்படி சொல்லக்கூடாது.. அவுங்க நல்லாத்தான் க்ளீன் பண்ணி இருந்தாங்க.. அவுங்க கேட்டா கஷ்டப்படப் போறாங்க"
"எதுக்குக் கஷ்டப்படப் போறாங்க?"
"அவுங்க நல்லாப் பண்ணினத குறை சொல்லக்கூடாது..நீ அழகா எழுதியிருக்கிறப்ப நல்லா எழுதலனு சொன்ன உனக்கு எப்படி இருக்கும்?"
"கஷ்டமா இருக்காது.. இன்னும் நல்லா எழுதிக்காட்டனுமினு நினைச்சுக்குவேன்"
4. வாக்கிங் போய் கொண்டிருந்தோம். ஒரு சிலந்தி தரையில் கிடந்தது. அருகில் சென்று தீஷு அதன் கால்களை எண்ணி, "அம்மா, எட்டு கால் இருக்கு.. அக்டோபஸ் கிடக்கு மா"
5. தீஷு, ஒரு இரவில் தூங்கும் முன், "அம்மா, இன்னைக்கு நான் நல்லா பிகேவ் பண்ணினேன்ல, அதனால நாளைக்கு எனக்கு ஒரு கிஃப்ட் கொடுங்க"
"என்ன கிஃப்ட் வேணும்"
"அத நான் சொல்லக்கூடாது. அப்புறம் என்ன கொடுக்கப்போறீங்கனு தெரிஞ்சிடுமே.. (அடுத்த விநாடி அவளாகவே) சரி..கேட்கிறதுனால செல்லுறேன்.. நாளைக்கு வேணா பன்னீர் டிக்கா மசாலா சமைச்சிடுங்க.."
6. தீஷுவை மதியத்தில் பார்த்துக் கொண்டிருந்த உதவியாளருக்குக் குழந்தைப் பிறந்திருக்கிறது. பத்து மாதமும் தீஷுவை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததால், அவர்கள் மாற்றத்தைப் பார்த்து, தீஷு குழந்தைப் பிறப்பது பற்றி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பாள். சில நாட்களுக்கு முன் என்னிடம், "அம்மா நான் பிஃகானவுடன் எனக்குப் பாப்பா பிறக்கும்ல" என்றாள். சில விநாடிகள் யோசித்து விட்டு நான், "ஆமாம்" என்றேன். "பிறந்தப்பிறகு நாம பாப்பாவுக்கு அப்பாவ எங்கிருந்து கூட்டிக்கிட்டு வர்றது?".
Games to play with 3 year old without anything
2 years ago
soo sweeet! liked it very much!
ReplyDeleteகுழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மழலைச் சொல் கேளாதோர்
ReplyDeleteLovely :) Beautiful :)
ReplyDeleteLovely :) Beautiful :)
ReplyDelete