Wednesday, January 26, 2011

குழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா?

"என் அப்பா பயங்கரக் குண்டு"
"இந்தக் குண்டர்கள் எல்லாம் கோழைக் குண்டர்கள்"
"உன் அப்பா ஒரு தடியன்.. மடையன்.."
"கோழைக் குண்டர்கள்"

இவ்வாக்கியங்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான புத்தகமான குட்டிக் குட்டி முயல் புத்தகத்தில் வருவது. பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் வந்துள்ளது.

குழந்தைகள் புத்தகத்தில் இது போன்ற வாக்கியங்கள் தேவையா? மொழி பெயர்க்கும் பொழுது ஆசிரியர் அவ்வாக்கியங்களை சற்றே மாற்றி இருக்கலாமே.

மேலும் பிற முயல்களை அடித்து வெற்றி (!) பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா? நான் வாசிக்கும் பொழுது இவ்வாக்கியங்க்ள் மாற்றியோ அல்லது விட்டு விட்டோ வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

புத்த‌க‌க்க‌ண்காட்சியில், குட்டிக் குட்டி முயல் தவிர, பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினோம்.

1.பூனை கணக்குப் படிக்கிறது
2.இனி பால் வேண்டாம் அம்மா
3.வால்களின் கதை
4.நீங்கள் என் அம்மாவா?

போன்றன என் நினைவில் உள்ளன. தேவையற்ற‌ வாக்கியங்கள் இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. சிறு சிறு கதைகளுடன் புத்தகங்கள் அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.

தூலிகாவின் Line and Circle தீஷுவிற்கு வாசிக்கப் பழக ஏதுவாக இருக்கும் என்ப‌த‌ற்காக‌ வாங்கினேன். அதிலிருந்த படங்கள் கொள்ளை அழகு. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து இத்தணை படங்கள் வரைய முடியுமா என்று தீஷுவிற்கு ஆச்சர்யம். படித்த முடித்தப்பின் வேறு என்ன படங்கள் உருவாக்கலாம் என்று விளையாண்டு கொண்டிருந்தோம். பயனுள்ள புத்தகம். ஆனால் விலை சற்று அதிகம் என்பது என் எண்ணம்.

சிபிடி வெளியீட்டில்

1. கிராமத்திற்கு வந்த குரங்குகள்
2. பலூனும் நானும்

வாங்கினோம். அதில் கிராமத்திற்கு வந்த குரங்குகள் சற்று பெரிய கதை. ஒரு வாசிப்பில் அவளுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க முடியவில்லை.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் என்ப‌தால், புத்தகங்களை வாசிக்க வாசிக்க தீஷுவிற்கு புரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்தவுடன் தீஷு, நல்ல தமிழல(!) திரும்ப சொல்லுங்க என்கிறாள்.

இப்புத்த‌கங்க‌ள் த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌த்திற்கு உத‌வுகின்ற‌ன‌.

5 comments:

  1. தேவையில்லைதான்.. புத்தகங்களில் படிச்சுட்டு பசங்க, முயற்சி பண்ணாம இருக்கணுமே..

    ReplyDelete
  2. என் மகனின் பாட புத்தகத்திலேயே (சமச்சீர் கல்வி முதல் வகுப்பு தமிழ் புத்தகம்) இந்த மாதிரி வார்த்தைகள் இருப்பதைப் பார்த்தேன்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    அந்தக் கவலை தான் எனக்கும் அமைதிச்சாரல்.

    வருகைக்கு நன்றி பின்னோக்கி. பாட புத்தகத்திலேயே இப்படி வாக்கியங்கள் இருப்பது வருந்தத்தக்கதே.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. தேவையற்ற வாக்கியங்கள் தான்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost