தீஷுவிற்கு மாண்டிசோரி முறையின் டென் போர்ட் சொல்லிக் கொடுத்தேன். முறையின் விளக்கமும், எவ்வாறு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற முறையும் இந்த வீடியோவில் இருக்கிறது.
2 * 2 அட்டையில் 1 முதல் 9 வரை எழுதிக் கொண்டேன். 4 * 2 அட்டையில் 10, 20 என 90 வரை எழுதிக் கொண்டேன். நீளத்தின் காரணமாக, 1 முதல் 9 வரை எழுதிய அட்டைகள் சிறிய அட்டைகளாகவும், 10,20 எழுதிய அட்டைகள் பெரிய அட்டைகளாகவும் இருக்கும். 63 என்று வைக்க வேண்டும் என்றால் 60 அட்டையை எடுத்து, பூஜ்ஜியத்தின் மேல் 3 வைத்தால், 63 போல் தெரியும். நான் கூறும் எண்களை அட்டைகள் கொண்டு உருவாக்கச் சொன்னேன்.
வெவ்வேறு எண்கள் வைத்து பழகியப்பின் முன்பு நான் செய்திருந்த பாசியையும் இணைத்துக் கொண்டேன். 63 என்றவுடன், அட்டையில் 63 வைத்து விட்டு, பாசியிலும் 63 வைக்க வேண்டும். பாசியில் பத்து பத்தாக வைக்கும் பொழுது, 1 டென், 2 டென்ஸ், 3 டென்ஸ் என்று சொல்லிக் கொடுத்தேன்.
இதன் மூலம் ஒன்ஸ், டென்ஸும் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இம்முறையால இரண்டு இலக்க எண்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment