சென்ற சனிக்கிழமை கர்நாடக பந்த். எங்கும் வெளியே போக முடியவில்லை. வெகு நாட்களாக தீஷுவிற்கு
பத்து பாசிகள் கோர்த்தது போல் நூறு நூறாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முதலில் பத்து பத்தாக பத்து (ஸ்..ப்பா.. எத்தண பத்து) செய்து இணைத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால அது சரியாக நிற்க வில்லை. சிறு வயதில் சிறு சிறு பாசிகளை இணைத்து WELCOME என்று எழுதிய நினைவு. ஆனால் அதன் பின்னல் நினைவில் இல்லை. பின்பு இணையத்தில் தேடி பின்னல் கற்றேன்.
இவ்வாறு ஒரு நூறு பாசிகள் சேர்க்க கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆனது. அவ்வாறு பத்து நூறுகள் கோர்த்து இருக்கிறேன். சனி, ஞாயிற்றில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் இதற்கே ஆனது. இது வரை தீஷுவின் ஆக்டிவிட்டி தயார் செய்ய இவ்வளவு நேரம் செலவிட்டது இல்லை. முன்பு ஸாண்ட் பேப்பர் (Sandpaper) எழுத்துகள் வெகு நேரம் செலவிட்டு செய்தேன். தீஷு தொடவே இல்லை. இவை தீஷுவிற்கு ஆர்வம் உண்டாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாவ்...தியானா....கலக்கறீங்க..இதேபோன்றும் டென்ஸும், தவுசண்ட்ஸூம் பப்புவின் பள்ளியில் பார்த்திருக்கிறேன். வீட்டிலேயே செய்துவைத்துக்கொண்டால் கணக்குக்கு உதவும் இல்லையா....சூப்பர்!
ReplyDelete