Wednesday, May 26, 2010

Copper Nickle



சிறு சிறு பயிற்சிகள் மூலம் தீஷுவிற்கு அவளுக்குப் புரியும் அறிவியிலை விளக்க வேண்டும் என்று நினைத்து ஒன்று இர‌ண்டு ப‌யிற்சிக‌ள் செய்தோம். ஆனால் எல்லாவற்றையும் போல் இதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இப்பொழுது மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.

இந்தப் பயிற்சி Janice VanCleave's Play and Find Out about Science
புத்தகத்திலிருந்து எடுத்தது. Janice Vancleave நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். Play and Find out about Maths வும் நன்றாக இருக்கிறது. மற்ற புத்தகங்கள் படித்ததில்லை.

இந்தப் பயிற்சிக்கு செம்பு(copper) பொருட்கள் வேண்டும். எங்களிடம் சில அமெரிக்க நாணயங்கள் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டோம். சிறிது வினிகர் எடுத்து, அதில் உப்பு கலந்து கொண்டோம். அவற்றில் கருப்பான செம்பு காசை போட்டால் பளிச் என்று சுத்தம் ஆனது. இது oxidation என்று Janice விளக்குகிறார்.

நாங்கள் ஒரு காசில் பாதியை மட்டும் வினிகர் கலவையில் போட்டோம். பாதி கருப்பாகவும் பாதி செம்பாகவும் இருந்தது. நான் சில காசுகளை போட்டு சிலவற்றை போடாமலும் வைத்திருந்து வித்தியாசம் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷு அனைத்தையும் போட வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

ஒரு இரவு முழுவதும் காசையும் பேப்ப‌ர் ஒன்று சேர்க்க‌ப்ப‌ய‌ன்ப‌டும் ஒரு கிளிப்பையும் (அத‌ன் பெய‌ர் தெரிய‌வில்லை) வினிகர் கலவையில் போட்டு வைத்திருந்தோம். மறுநாள் காலையில் கிளிப் oxidation னால் செம்பாக மாறி இருந்தது. தீஷுவிற்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. இன்னும் சில வருடங்கள் கழித்து விளக்கினால், அவளுக்கு முழு தத்துவமும் புரியும் என்று நினைக்கிறேன்.

2 comments:

  1. அன்பு தீஷூ,



    தங்களுக்கு விருது இங்கே

    http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

    ReplyDelete
  2. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost