தீஷுவின் பிறந்த நாள் பரிசாக ஒரு செஸ் போர்டு வந்திருந்தது. நான்கு வயதில் செஸ் புரியாது என்று எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் தீஷு கேட்டுக்கொண்டே இருந்தாள். அதனால் எங்கள் வீட்டிலிருந்த பழைய போர்டை எடுத்துக் கொடுத்தேன். சொல்லித்தருவதை அப்பாவிடம் ஒப்படைத்து விட்டேன்.
முதலில் அப்பா, அவர் காய்களை ஒவ்வொன்றாக வைத்துக்கொண்டே வந்தார். தீஷுவும் அதே போல் அவள் காய்களை அடுக்கினாள். பின்பு சில காய்கள் நகர்த்தினார்கள். ஆனால் எதிர்பார்த்தது போல் தீஷுவிற்குப் புரியவில்லை. போதுமென்று சொல்லி விட்டாள். மாலை அவளாகவே செஸ் போர்டு வேண்டும் என்றாள். எடுத்துக்கொண்டுத்தவுடன் எதிர்பாராத விதமாக அவளுடைய எல்லா காய்களையும் அவளே சரியாக அடுக்கினாள். அப்பா அவருடைய காய்களையும் அடுக்கச் சொன்னார். அடுக்கினாள். அடுத்து ஒவ்வொரு காய்களையும் காட்டி பெயர் சொல்லச் சொன்னவுடன் சொன்னாள்.
நான் கண்களை மூடி, தடவிப்பார்த்து சொல்லச் சொன்னேன். அதுவும் செய்தாள். பின்பு
Mystery Bag போல் ஒரு பையில் வைத்துவிட்டு, தடவி பார்த்து அப்பா கேட்கும் காய்களை சரியாக எடுத்துக் கொடுக்க வேண்டும். அதுவும் நன்றாக செய்தாள். காய்களை நன்றாக கண்டுபிடிக்கவும், சரியாக அடுக்கவும் தெரிகிறது.
சில நாட்களுக்கு சில பொருட்கள் அதிகமாக எடுக்கப்பட்டும், விளையாடப்பட்டும் இருக்கும். அப்புறம் பல நாட்களுக்கு எங்கு இருக்கு என்று தெரியாது. அப்படி செஸ்ஸும் ஆகுமா அல்லது அடிக்கடி எடுக்கப்பட்டு விளையாடப்படுமா என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment