Monday, November 3, 2008

தண்ணிக் காப்பி சாப்பிட வாரீங்களா!!

தீஷுவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருள் - Disney tea cups. அடிக்கடி விளையாண்டு கொண்டுயிருப்பாள். Jugலிருந்து கப்பில் ஊற்றிக் கொடுப்பாள். நான் வாங்கி கொண்டு "Thank you" என்று சொல்ல வேண்டும். அவள் "You are welcome" என்று சொல்லுவாள்.


இந்த முறை நான் ஜக்கில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவளுக்கு மிகவும் பிடித்து போனது. மாற்றி மாற்றி ஊற்றி விளையாண்டு கொண்டு இருந்தாள். இனி எப்பொழுதும் தண்ணீர் Tea Party தான் எங்க வீட்டில!!!






Art work செய்து ரொம்ப நாள் ஆகி விட்டது. Gumஆல் (ஒட்டப் பயன்படும் கோந்து) ஒரு படம் வரைந்து கொண்டோம். அதன் மேல் மண்ணைத் தூவி, காய வைத்து விட வேண்டும். அதன் மேல் Paint கூட பண்ணலாம். மண்ணிற்கு பதில் உப்பு வைத்து நாங்கள் முன்பே செய்து இருக்கிறோம்.

9 comments:

  1. நன்றி விஜய் ஆனந்த்

    நன்றி தமிழ் பிரியன்.

    ReplyDelete
  2. நான்கூட சின்ன வயசில் இதேமாதிரி ஆர்ட்வர்க் செஞ்சிருக்கேன்:):):) நீங்க நல்ல அம்மாங்க தண்ணி கொடுக்கறீங்க. நான் சின்ன வயசுல இருக்கும்போது எங்கம்மா தண்ணிய நான் தொட்டாலே திட்டுவாங்க:):):)

    ReplyDelete
  3. நல்ல பதிவு

    வெரிகுட் தீஷு.

    ReplyDelete
  4. வாங்க Rapp. எங்க அம்மா கூட தண்ணில விளையாட விட மாட்டாங்க. ஏதோ நமக்கு கிடைக்காதது நம்ம குழந்தைகளுக்காவது கிடைக்கட்டும் தான்.

    நன்றி Ashish.

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

    ReplyDelete
  5. நல்லாருக்கு..லிட்டில் டீ கேர்ள்!! மாண்டிசோரியில் இதுவும் ஒரு வர்க்! பப்புவைக் குறித்தான ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost