Wednesday, October 1, 2008

எண்ணுவதற்கு முன்னால்

தீஷுவிற்கு 1,2,3... சொல்லத் தெரியும். ஆனால் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பிருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. ஆகையால் 1க்கு ஒரு வட்டம், 2க்கு இரண்டு வட்டங்கள் என 10 வரை ஒரு வார்டு டாக்குமெண்ட் செய்து, அதில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கல்லை வைக்க சொன்னேன். ஒவ்வொரு முறையும் கல்லை வைக்கும் பொழுது எண்ண வேண்டும். டாக்குமெண்டை Numerals download செய்து கொள்ளலாம்.

தீஷு சரியாக செய்தாள். எனக்கு அவள் கல்லை வைப்பதை விட கண்ணாடி கப்பிலிருந்து கல்லை எடுக்கும் சத்தம் தான் அவளுக்கு பிடித்திருந்தாக தோன்றியது.





தீஷுவிற்கு 1 முதல் 10 வரை சரியாக சொல்லத் தெரியும். 11 முதல் 20 வரை தெரியாது. ஆனால் 21 முதல் மறுபடியும் 1 முதல் 9 வரை கடைசியில் திரும்பி வருவதைப் புரிந்து கொண்டாள். அதை மீண்டும் சரியாக சொல்வாள். 30 நாம் சொல்ல வேண்டும். 31 முதல் 39 வரை சொல்வாள். இது போல் 99 வரை சொல்லத் தெரிகிறது. புரிந்து விட்டால் எல்லாமே சுலபம் தான்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost