தினசரி காலெண்டரை கிழித்தவுடன், ராஜீவ் காந்தி பிறந்த நாள் என்று அவர் புகைப்படம் இருந்தது.
தீஷு : யாருமா இது?
அம்மா : ராஜீவ் காந்தி, இந்தியாவோட பழைய ப்ரைம் மினிஸ்டர்
தீஷு : ஏன் U.S ப்ரைம் மினிஸ்டர் போட்டோவெல்லாம் வர மாட்டேங்குது?
அம்மா: இது இந்தியாவில வாங்கினதுனால
தீஷு : அடுத்த காலெண்டர் நம்ம இங்க வாங்குவோமா?
அம்மா : சரி
தீஷு : அம்மா, Costco (மொத்த கடை. அனைத்துப் பொருட்களும் மிகுந்த அளவிலேயே கிடைக்கும்) வாங்க வேண்டாம். காலெண்டர் பெரிசா இருக்கும். அப்புறம் ஒரு நாள் தேதியை கிழிக்க நமக்கு இரண்டு நாள் ஆகும்.(சிரித்துக் கொண்டாள்)
காரில் சென்று கொண்டிருந்தோம். தீஷு ஏதோ சிரிக்கும் படி சொல்லிக் கொண்டே வந்தாள். சிரித்து முடித்தவுடன், "அம்மா, ஜோக்கு கேட்டு சிரிச்சாச்சா.. இப்ப தூங்க ஆரம்பிங்க". நான் என்ன செய்யணும் என்று இவளைத்தான் கேட்க வேண்டும்.
அப்பா : இந்த டையினிங் டேபிலுக்கு இவ்வளவு விலையா?
தீஷு: அப்பா, அவுங்க மொதல டேபில் செய்யணும், அப்புறம் லாரில கடைக்குக் கொண்டு வரணும், யாராவது தினமும் துடைக்கணும். இதுக்கு உங்களுக்கு $10, $20 டாலருக்கு கொடுக்க முடியுமா? இது தான் விலை. வேணும்னா வாங்குங்க.
காலையில் எழுந்தவுடன், அம்மா, நீங்க எப்ப செத்து போவீங்க?
(அதிர்ச்சியாக) என்னது?
When will you die?
(பயத்துடன்) 100 வயசுல
நோ.. நீங்க தெளசண்டு(thousand) இயர்ஸ் இருக்கணும். ஏன்னா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.
ஓ இதுக்கு தானா.. ஸ்..அப்பா..