1. தீஷு என்னிடம், "இன்னைக்கு அப்பாவா சமைச்சாரு.. அதான் சூப்பரா இருக்கு..". அவளை நான் திரும்பி பார்த்தவுடன், கேள்வியின் பாதிப்பு புரிந்த அடுத்த விநாடி, "நீங்க சமைச்சா ரொம்ப சூப்பரா இருக்கும்.. அப்பானா வெறும் சூப்பர்.. அதான் கேட்டேன்".
2. என் கணவரிடம் நான், "வெறும் தயிர் வாங்க போய் இவ்வளவு செலவாகிடுச்சு பாருங்க..". எப்பொழுதும் போல் அவர் தலையை மட்டும் ஆட்ட, தீஷு, "தயிர் வாங்க போனா, அத மட்டும் பாக்கணும், மத்த எல்லாத்தையும் பாத்தா இப்படித்தான்".. ஒருவர் மனதிற்குள் சிரித்தது எனக்கு வெளியில் வரைக்கும் கேட்டது.
3. என் கணவரிடம் நான், "பருப்பெல்லாம் ரொம்ப இருக்கு.. கொஞ்ச நாளைக்கு இந்தியன் ஸ்டோர்ஸ் போகாம ஏதாவது வேணும்னா யாராவது போகும் போது வாங்கிட்டு வர சொல்ல வேண்டியது தான்"..
தீஷு, "எதுக்கு யாரோ நமக்காக வாங்கிட்டு வரணும். நம்ம ஏன் போகக்கூடாது?"
நான், "ரொம்ப தூரத்துல கடை இருக்கு... எல்லாம் நிறைய இருக்கு.. ஒன்று இரண்டு வாங்கிறது எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்"
தீஷு, "அந்த இல்லாதது இல்லாம சமைக்க் முடியாதா.. எதுக்கு யார்கிட்டையாவது சொல்லி விடணும்?"
நான், " நான் சமைக்கவே போறது இல்லை.. விடு"
தீஷு (பாவமாக வைத்துக் கொண்டு)"அப்ப நான் பசிக்கிதுனு சொன்னா, என்னம்மா செய்வீங்க?"
4. நானும் தீஷுவும் வீட்டிற்கு பின்னால், தக்காளி விதை விதைத்து வைத்தோம்.
தீஷு,"தக்காளி வந்தவுடனே, நம்ம கடையில தக்காளி வாங்கவே வேண்டாம்"
நான்,"நிறைய அணில் இருக்குடா...அது எல்லா தக்காளியையும் சாப்பிட்டு விடும்"
தீஷு, "நம்ம சாப்பிடற மாதிரி அதுவும் கொஞ்சம் சாப்பிடட்டும்மா"
புல்லரிக்க வைக்கிறீயேடா..
5. அப்பா அவளிடம் சில வித்தியாசமான கேள்விகள் கேட்பார். அப்படி ஒன்று. "ஒரு பையனுக்கு வலது கையில அடிப்பட்டுச்சுனா எப்படி எழுதுவான்?"
தீஷு: " லெஃப்ட் ஹாண்டுல எழுதலாம். அவங்க அம்மாகிட்ட எழுத சொல்லலாம். மிஸ்கிட்ட எழுத முடியாதுனு சொல்லலாம். கையில சீக்கிரம் புண்ணு ஆறதுக்கு மருந்து போட்டுக்கிடலாம்".
அப்பா,"ஓ டாக்டர்கிட்டவா? "
தீஷு:"சின்ன புண்ணுக்கு எதுக்கு டாக்டர், தேங்காய் எண்ணெய் போட்டா போயிடும்.."
அம்மா உங்க டிரெயினிங்கா?