ப்ளைட்டில் அதிக சிரமம் இருக்கவில்லை. அங்கே வீட்டில் கிளம்பி இங்கே வீட்டிற்கு வருவதற்கு சரியாக 24 மணி நேரமானது. அதில் கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரம் தீஷு தூங்கிக் கொண்டே வந்தாள். உணவும் சாப்பிடவில்லை. ஆனால் இங்கு வந்து jet lag இருக்கவில்லை. ஒர் இரு நாட்களில் சரியாகிவிட்டாள். ஆட்டோவிலும், பைக்கிலும் செல்ல விருப்பமாக இருக்கிறது. எதில் போகலாம் என்றால், இதில் ஏதாவது ஒரு பதில் வரும். முதல் நாள் பைக்கில் போன பொழுது, காத்து அடிக்கிது, வெயில் அடிக்கிது என்று சொல்லிக் கொண்டே வந்தாள். ஆனால் இப்பொழுது பிடித்து விட்டது. ஏன் பைக்கில் கார் ஸிட் மாட்டவில்லை என்று கேட்கிறாள். சென்னையில் ஒரு நாள் பஸ்ஸில் போனோம். அதற்குப் பிறகு அவளுக்கு தினமும் பஸ்ஸில் போக வேண்டும். பஸ் ஸ்டாப் போகும் பொழுது எல்லாம் அவள் பேச்சு இன்று அவள் போக இருக்கும் பஸ் கலர் பற்றியதாக இருக்கும். அதற்காகவே சென்னை இருந்த அனைத்து தினத்திலும் அவளை பஸ்ஸில் கூட்டிச் சென்றோம்.
அவளுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது. ரோட்டில் கத்தி சாணம் தீட்டுகிறவர் பக்கத்தில் போய் நின்று வேடிக்கைப் பார்த்தாள். நானும் செய்யவா என்று கேட்டாள். ஏன் நாய் இங்க நிக்கிது? மாடு ஏன் குப்பை சாப்பிடுது? என்று பல ஏன்கள். முதலில் கூட்டத்தைப் பார்த்து பயந்தாள். இப்பொழுது அந்த பயம் குறைந்திருக்கிறது. மார்க்கெட், ரைஸ் மில் என்று எல்லா இடத்திலும் நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டும். முதலில் கரண்ட் கட் என்றவுடன் புரியவில்லை. இப்பொழுது Fan நின்றவுடன், சந்தோஷமாக கரண்ட் கட் என்று கத்துகிறாள். மொத்தத்தில் நன்றாக செட்டாகிவிட்டாள்.
இப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஆக்டிவிட்டீஸ் செய்கிறோம். அதன் தொகுப்பின் முதல் பாகம்..
03/04/2009
தாயக்கட்டையை உருட்டி, அதன் புள்ளிகளை எண்ணி, அதை எழுத வேண்டும். இது எண்ணுதல், எண்ணின் உருவத்தை ஞாபகப்படுத்துதல், எண்ணை எழுதுதல் போன்றவைக்கு உதவுகிறது. நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி செய்தோம். நான் உருட்டும் பொழுதும் அவளே எண்ணவும் எழுதவும் செய்தாள்.ஐந்து நிமிடங்களில் போர் அடித்து விட்டது. ஆனால் அதற்குள் இருபது முறையேனும் செய்திருப்போம்.
சைனீஷ் செக்கர்ஸ் காயின்ஸை கலர் மூலம் பிரித்தோம் (Sorting). அதன் பின் தாயக்கட்டை உருட்டி, அத்தனை காயின்ஸை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் யார் அதிக காயின்ஸ் வைத்திருக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள். தீஷுவிற்கு புரியவில்லை. ஆனால் உருட்டி, எண்ணி, காயின்ஸை எடுத்துக் கொண்டாள். கடைசியில் நீ தான் ஜெயித்தாய் என்றவுடன் சிரித்துக் கொண்டாள்.
03/05/2009
Dot to Dot : எண்களை இணைத்தல். ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை இணைக்கும் பயிற்சியில் இப்பொழுது விருப்பம் வந்திருக்கிறது. இணைக்கும் முன் என்ன படம் வரும் என்பதை ஊகித்து, முடித்தவுடன் அது வருவதைப் பார்ப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி
சிறு பூட்டுக்களில் அதன் சாவியைப் பொறுத்தித் திறக்க வேண்டும். இரண்டு பூட்டுகள் தந்தேன். அதன் சாவிகளை சரியாகக் கண்டுபிடித்துவிட்டாள். திறக்கவும் செய்தாள். ஆனால் அழுத்திப் பூட்டத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் பூட்டித் தர வேண்டுயிருந்தது.மிகவும் விருப்பமாக அரைமணி நேரம் செய்தாள். மீண்டும் மாலையில் செய்தாள். இது கை கண் ஒருங்கினைப்புக்கு நல்லது மற்றும் விரல்களுக்கு வேலை தருகிறது.
03/09/2009
டால்பின், நண்டு, மீன், ஆமை, தேள் போன்றவற்றின் சிறு சிறு பொம்மைகள் கிட்டத்தட்ட இருபது வரை இருந்தன. முதலில் அவை என்ன என்ன என்று சொல்லிக் கொடுத்தேன். அடுத்து அனைத்தையும் எடுத்து நடுவில் வைத்து விட்டு, "Can you please give me a dolphin? என்றவுடன் அவள் டால்பின் எடுத்துத் தர வேண்டும். தந்தவுடன் "Thank you" என்றேன். அடுத்து அவள் முறை. நடுவிலுள்ளது மட்டுமே கேட்க வேண்டும். தீஷு "Can you please " என்று கேட்பதற்கு பதில் "Give me " அல்லது "I want" என்று தான் சொன்னாள். ஆனால் தாங்க் யூ சரியாகச் சொன்னாள். ஒவ்வொரு முறையும் "Can you please" சொல்லு என்று நினைவுப்படுத்த வேண்டியிருந்தது. இதன் மூலம் எப்படி கேட்க வேண்டும் என்று பழக்க முடியும். மற்றும் vocabularyயும் அதிகமாகும்.
03/10/2009
மீண்டும் "Can you please give me a ...?" விளையாண்டோம். இந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது.
சமையல் பொருள் போட்டு வைக்க பயன்படும் டப்பாகள் அடுக்கு அடுக்காக இருந்தது. இதை வைத்து stacking box விளையாண்டோம். நான்கு டப்பாக்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து, அதன் மூடிகளை சரியாக கண்டுபிடித்து, மூடி, திறந்து (மிகவும் சிரமப்பட்டு திறந்தாள்) என ஒரு மணி நேரம் விளையாண்டுக் கொண்டிருந்தாள். இது visual discriminationக்கு மிகவும் நல்லது. விரல்களுக்கும் வேலை கிடைக்கிறது.
Cuisenaire rods வரிசையாக அடுக்கினாள். எப்பொழுதும் உதவி தேவைப்ப்டும். இன்று அவளாகவே அடுக்கி விட்டாள்.
Addition tables (1+1 is 2,2+1 is 3) தப்பாக சொல்லிக் கொண்டிருந்தாள். நான் திருத்தியவுடன், "மிஸ்.கீதா அப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க, நீ தப்பா சொல்ற" என்றாள். "நான் ஏன் ஸ்கூலுக்கு போகல? Bad girl ஆகிட்டேனா?" என்று கேட்கிறாள். "எங்க ஸ்கூல தேவ், அலெக்ஸ் (அ-லெக்ஸ் என்றாள்) எல்லாம் இருக்காங்க" "நான் நேத்து தேவ்க்கு ஹாய் சொல்லல" என்றாள். இந்தப் பெயர்களை இப்பொழுது தான் முதல் முறையாகச் சொல்கிறாள். ஸ்கூலை மிஸ் செய்கிறாள் என்று நினைக்கிறேன்.
சில நாட்களாக 5,10,15,20.. மற்றும் 10,20,30.. சொல்லிக்கொண்டிருந்தாள். இன்று முதல் முறையாக 100,200,300...1000 வரை சொன்னாள். ஆயிரத்தை டென் ஹண்ரட் என்றாள்.
Games to play with 3 year old without anything
2 years ago