Monday, November 24, 2008

Lowercase letters and phonics

தீஷு படிப்பது மாண்டிசோரி ஸ்கூல் என்பதால், குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட syllabus கிடையாது. குழந்தை ஏதாவது ஒன்றை நன்றாகக் கற்றப்பின் அடுத்தது சொல்லிக் கொடுக்கிறார்கள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது கிடையாது. ஆகையால் ஒரே வயதுடைய இரண்டு குழந்தைகள் வேறு வேறு கற்றுக்கொண்டிருக்கலாம்.




தீஷு ஸ்கூலுக்கு Parents-Teachers meeting போயிருந்த பொழுது, தீஷு Practical life activities, Sensorial activities நன்றாக செய்கிறாள். Uppercase letters(A,B,C) comfortableஆக இருப்பதால், அடுத்து Lowercase letters(a,b,c) சொல்லி கொடுக்கப் போவதாக கூறினார்கள்.அவர்கள் கொடுத்துள்ள list




1. Lowercase பார்த்து கண்டுபிடித்தல், எழுதுதல்

2. அவள் uppercase எழுதுவதால் அவள் பெயர் எழுதப் பழக்கலாம்

3. கணக்கைப் பொறுத்த வரை 1 முதல் 30 வரை சொல்லிக் கொடுக்கலாம்



தீஷுவின் பெயரில் 11 எழுத்துக்கள் உள்ளன. அவள் இனிஷியலுக்கு பதிலாக அவள் அப்பாவின் பெயரை கடைசி பெயராக(Last name) கொடுத்துள்ளோம். அவள் பாஸ்போர்ட், PIO card எல்லாவற்றிலும் இப்படி தான் அவள் பெயர் உள்ளது. ஆகையால் அவள் பெயரில் மொத்தம் 17 எழுத்துக்கள். எப்படி பழக்கலாம் என்று யோசித்துக் கொண்டுயிருந்தேன். அப்புறமாக கடைசி பெயரை கடைசியாகப் பார்த்துக் கொள்ளலாம். முதலில் First Name மட்டும் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்.









Lower case எழுத்துக்களைக் கண்டுபிடிக்கப் பழக்கலாம் என்று நினைத்தேன். இந்த puzzleலை மதுரையில் வாங்கினோம். ஒரு எழுத்து, அந்த எழுத்துக்கான இரண்டு படங்கள். மூன்றையும் சேர்க்க வேண்டும். நானே வரிசையாக எழுத்துக்களையும் படங்களையும் எடுத்துக் கொடுத்தேன். j வரை பண்ணியவளுக்கு அதற்கு அப்புறம் ஆர்வம் இருக்கவில்லை. அதற்கு பதிலாக jக்கு கீழ் k என வரிசையாக அடுக்க ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட எல்லா எழுத்துக்களையும் அடுக்கி விட்டாள். I was quite shocked.





Lowercase எழுத்துக்களை எழுதுவதற்கு பழக்குவதற்கு எனக்கு இஷ்டமில்லை. அவளாக விருப்பப்பட்டுக் கேட்டால் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அதற்கு பதில் Initial letter identification பழக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு ஒவ்வொரு எழுத்துகளுக்கும், அந்த எழுத்தால் ஆரம்பிக்கும் 6 பொருட்களின் படங்களை download செய்து, வெட்டி வைத்துக் கொண்டேன். முதலில் நான் எடுத்தக் கொண்ட எழுத்துக்கள் - b and f. b - banana, bear, basket, bus, boat, bun. f - fin, finger, frog, feet,feather, fish. அந்த படத்தின் பெயரை படிக்கும் பொழுது, முதல் எழுத்துக்கு அழுத்தம் கொடுத்து படித்தேன். b கீழ் வருமா அல்லது f கீழ் வருமா என்று கேட்டுப் பிரித்தோம். தீஷு புரிந்து கொண்டாள். சில தவறுகள் செய்கிறாள். அவள் கஷ்டப்படாமல் இருந்தால் தினமும் இவ்வாறு இரண்டு இரண்டு எழுத்துக்கள் பழக்கலாம் என்று இருக்கிறேன். எப்படி போகிறது என்று சொல்லுகிறேன்.



உனக்கு ஒரு மிட்டாய் போதும்..

தீஷு ஸ்கூலில் யாருக்கோ பிறந்த நாள் என்று Goody bag கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு M&M மிட்டாய் பாக்கெட்(நம் நாட்டில் கிடைகிறதா என்று தெரியவில்லை.. நம் ஊர் Gems போல் இருக்கும்) இருந்தது. தீஷு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். எனக்கு ஒன்று கொடு என்றேன். ஒன்று கொடுத்தாள். சாப்பிட்டு முடித்தவுடன், இன்னொரு மிட்டாய் கொடு என்றேன். ஒரு நாளைக்கு ஒன்று தான் சாப்பிட வேண்டும். வயிறு பசித்தால், corn flakes சாப்பிடு, சரியா போகும் என்றாள். அப்புறம் என்ன நினைத்தாலோ, ஒன்று கொடுத்தாள். ஒண்ணு தான். இனிமேல் கேட்க கூடாது என்ற கண்டிஷனுடன். அந்த நேரத்தில் என் கணவர் ஆபிஸிலிருந்து வந்தார். அவரிடம் நீங்கள் கேளுங்கள் என்றேன். அவர் கையில் வாங்கி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப கேட்டார். கொடுத்து கொண்டேயிருந்தாள். அம்மாவுக்கு தான் கணக்கு. என்ன சொல்ல?




அன்னைக்கு காலையில் எழுந்ததிலிருந்து அப்பாவுடன் ஆபிஸ் போக வேண்டும் என்றாள். ஐ.டி கார்ட் வேண்டும் என்றேன். தனக்கு ஐ.டி கார்ட் வேண்டும் என்றாள். நல்ல படிச்சு, நல்ல எழுத தெரிந்து, பெரிய பெண்ணானவுடன் ஐ.டி கார்ட் கொடுப்பாங்க என்றேன். வேகமாக போய் ஒரு நோட் எடுத்து வந்து எழுத ஆரம்பித்தாள். அடுத்து ஒரு புக் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தாள். அடுத்து பாப்பா பெரிய பாப்பா ஆகிட்டேன். ஐ.டி கார்ட் கொடு என்றாள். என்ன சொல்லனு கஷ்டமாகிடுச்சு.



Thursday, November 20, 2008

அடுத்த அடுத்த நாள்

தீஷுவின் activities பதிவு போடுவது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கு.

கலர் மாட்சிங் நாங்கள் ஏற்கெனவே நிறைய தடவை செய்து இருக்கிறோம். எப்போழுதும் கார்டின் மேல் அதன் மாட்சிங் கார்டை வைக்க செய்வேன். ஆனால் இந்த முறை, மாண்டசோரி கலர் டாப்லஸ்ட் போல, கார்டின் வலது பக்கம் வைக்க செய்தேன். இதன் மூலம் படிப்பதற்கு தேவையான இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் பார்க்க கண்களும், மூளையும் பழகும்.

கணிததிற்கு முதலில் இந்த டாக்குமெண்ட்டைப் பழக்கியதற்குப் பின், மாண்டசோரி spindle box போன்று ஒன்றைப் பழக்கியதற்குப் பின், இந்த மாதிரி card and counters பழக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் தயார் செய்து வைத்திருந்ததை எடுத்து வந்து சொல்லி கொடு என்றாள். ஆகையால் இதை செய்தோம். zero முதல் 9 வரை வரிசையாக அடுக்க சொன்னேன். அடுக்கினாள். ஆனால் dot counting நாங்கள் இருவரும் சேர்ந்து செய்தோம். 75% நான் தான் செய்தேன். மீண்டும் சில நாட்கள் கழித்து தான் சொல்லித் தர வேண்டும்.

Nuts and Bolts - மாண்டிசோரி முறையில் Pratical lifeயில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாஸ்டிக் டூல்ஸ் ஸேட், எங்களுக்கு கொடுக்கப்பட்டது. ரொம்ப நாளா தீஷுவிற்கு கொடுக்கவில்லை. இப்பொழுது பார்த்தவுடன், கிட்ட தட்ட அரை மணி நேரம் விளையாண்டு கொண்டுயிருந்தாள். இது கை விரலுக்கான நல்ல பயிற்சி.

Wednesday, November 19, 2008

கவிதாயினி

தீஷு சில நாட்களாக, ஏதாவது பொருள் பற்றிப் பாட சொன்னாள். அவள் கேட்கும் பொருட்களுக்கு அனைத்துக்கும் ஏதாவது பாடல் ஆங்கிலத்திலோ, தமிழிலோ தெரிந்திருக்கும். நாங்களும் பாடுவோம். ஒரு நாள், மாறுதலுக்கு, நீ பாடு என்றோம். அவள் சுற்றிப் பார்த்து விட்டு, போன் பற்றிப் பாடுகிறேன் என்றாள். போன் பற்றி பாட்டு சொல்லிக் கொடுத்தில்லையே என்று நினைத்துக் கொண்டே பாடு என்றோம். அப்பொழுது அவள் பாடியது தான் இது. பாட்டு வரி, ராகம் எல்லாம் அவளே.











இப்பொழுது அவள் எல்லாவற்றை பற்றியும் பாடுகிறாள். TV, computer, அப்பா - இப்படி எல்லாம். மேலே பாடின அதே வரி, அதே ராகம் ஆனால் போன் என்ற வார்த்தைக்கு பதில் அவள் பாடும் பொருளைப் போட்டுக் கொள்கிறாள்.



குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

சும்மா Browse பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சில குழந்தைகளுக்கான இணையதளங்கள் கிடைத்தன.




1. http://www.starfall.com/ - ஆங்கிலத்துக்கு

2. http://www.mathebook.net/ - கணிதம்

3. http://www.parentingscience.com/preschool-number-activities.html - கணிதம்.




starfall.com மட்டும் நானும், தீஷுவும் பார்த்தோம். பயனுள்ளதாக இருந்தது.




அமிர்தவர்ஷினி அம்மா பகிர்ந்த தளங்கள்.
http://www.boowakwala.com

http://toyshop.uptoten.com

http://www.coloringpage.org

http://www.kidsgames.org

ரொம்ப நாளைக்கு அப்புறம்..

தீஷுவின் activities பற்றிய பதிவு.


Funnel: Wet pouringயின் அடுத்த கட்டம். Funnelயை ஒரு பாட்டிலில் பொருத்தி ஒரு டம்பளரில் தண்ணீர் கொடுத்தேன். விளக்கிச் சொல்வதற்கு முன்னமே, அவளாகவே செய்யத் தொடங்கி விட்டாள். தண்ணீரை ஊற்றியப் பின், தண்ணீர் கீழே உள்ள பாட்டிலிற்கு தான் போகிறது என்பதில் அவளுக்கு சந்தேகம். குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள்.







தீஷுவிற்கு பயன்படும் என்று Cuisenaire rods வாங்கியுள்ளோம். பத்து நிறங்களில், ஒவ்வொரு நிறமும் ஒரே அளவு என பத்து அளவுகளில் கிட்ட தட்ட 75 rods உள்ளன. இதின் மூலம் கூட்டல், கழித்தல் போன்ற abstract conceptயை material மூலம் சொல்லித் தரலாம். தீஷுவிற்கு rodயை பழக்குவதற்காக, Pattern formation பண்ணினோம். ஒரு வெள்ளை, ஒரு சிவப்பு என மாறி மாறி வைக்க வேண்டும். இதே மாதிரி,ஏற்கெனவே பட்டன் மூலம் செய்திருந்ததால், எளிதாக செய்தாள்.


வீட்டில் ஒரு insulated cup mug சும்மா பயன்படுத்தப்படாமல் இருந்தது. வேறொரு வேலைக்காக வெட்டிய straw சும்மாயிருந்தது. சும்மா இருந்த தீஷுவின் விரலுக்கு வேலை கொடுப்பதற்காக அவை இரண்டும் பயன்படுத்தப்பட்டன.


இந்த Tree puzzle மதுரையில் வாங்கினோம். முதலில் தீஷுவிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஒரளவிற்கு செய்கிறாள். சில நேரங்களில் உதவி தேவைப்படுகிறது.

Monday, November 17, 2008

பேசா மடந்தை..

சென்ற வாரம் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு Chuck E.Cheese போயிருந்தோம். பார்ட்டி முடிந்தவுடன், அங்கிருந்த Games விளையாட ஆரம்பித்தோம். தீஷுவிடம் நல்ல மாற்றம். சென்ற முறை நாங்கள் சொல்லும் விளையாட்டுகளை மட்டும் விளையாண்டு கொண்டுயிருந்தாள். இந்த முறை அவளே தேர்ந்து எடுத்து விளையாண்டாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு, car driving. அது போல எங்கு இருந்தாலும் விளையாட வேண்டும் என்பாள். இது போல chuck E.Cheese ஒன்று மட்டும் இருந்தது. ஒரு ஐந்து அல்லது ஆறு வயது குழந்தை விளையாண்டு கொண்டுயிருந்தது. நாங்கள் ரொம்ப நேரம் காத்திருந்தோம். அது விடுவதாக இல்லை. தீஷு விளையாட வேண்டும் என்றாள். திரும்ப வரலாம் என சொல்லி, வேற விளையாட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்று விட்டோம். மீண்டும் வெகு நேரம் கழித்து திரும்பி வந்த பொழுதும், அந்த குழந்தை விளையாண்டு கொண்டுயிருந்தது. Token எல்லாம் தீர்ந்த பின் விட்டு சென்றது. நாங்கள் விளையாண்டோம். தீஷு இரண்டாவது முறை விளையாடும் பொழுது, சில குழந்தைகள் காத்திருக்க ஆரம்பித்தன. தீஷுவிடம் அடுத்த குழந்தைகளின் முறை என்றோம். உடனை விட்டுவிட்டாள். தான் காத்திருந்து பெற்றதை, அடுத்த ஒரு நிமிடத்தில் கொடுப்பதற்கு, Maturity வேண்டும். அதை ஒரு 21/2 வயது குழந்தையிடம் பார்த்தது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.




சனிக்கிழமை தீஷு ஸ்கூலில் Parent-Teacher Meeting இருந்தது. தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களையும் சந்திதனர். நாங்கள் முக்கியமாக கேட்டது, அவளுடைய communication. இங்கிலீஷ் தெரியாதலால், அவள் டீச்சரிடமும், மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு பழகுகிறாள் என்று கேட்டோம். பேசுவதைப் புரிந்து கொள்கிறாள் மற்றும் சில நேரங்களில் பதிலும் சொல்கிறாள் என்றார்கள். மற்ற படி அவர்களுடைய Comment, "She minds her own business". மற்றவர்களிடம் பழகாமல், அவள் அவளுடைய வேலைகளை மட்டும் பார்பது தவறு ஒன்றுமில்லை என்பது போல் கூறினார்கள். எனக்கு சரியா என்று தெரியவில்லை. I think she will outgrow. பார்க்கலாம்.

Friday, November 14, 2008

டைம் பாஸ் விளையாட்டுக்கள்

எங்கள் வீட்டில் இப்பொழுது பிரபலமாக விளையாடப்படும் விளையாட்டுக்கள்.




1. பொருட்கள் கண்டுபிடித்தல் : ஏதாவது ஒரு கலர் சொல்லுவோம். அந்த கலரில் தீஷு ஏதாவது ஒரு பொருளைத் தொட்டு காட்ட வேண்டும்.




2. ABC விளையாட்டு : நாங்கள் A என்றால், தீஷு B என்று சொல்ல வேண்டும், அடுத்து நாங்கள் C என்று சொன்னவுடன், அவள் D என்று சொல்ல வேண்டும். இப்படியாக ஒன்று விட்டு ஒன்று சொல்லிக் கொண்டே வர வேண்டும்.




3.123 விளையாட்டு : இதுவும் ABC போல தான். ABC பதில் 123.




4. முத்த விளையாட்டு : தீஷுவின் கன்னத்தில் 1 அல்லது 2 அல்லது 3 முறை முத்தமிடுவேன். அதே அளவு அவள் திரும்ப என் கன்னத்தில் முத்தமிட வேண்டும். நான் முத்தமிடும் பொழுது எண்ண மாட்டேன். அவளாக மனதுக்குள் எண்ண வேண்டும். 3 முறைக்கு மேல் முத்தமிட்டால், defaultஆக 5 முத்தங்கள் தந்து விடுகிறாள்.






5. Clap விளையாட்டு : இதுவும் முத்த விளையாட்டு போல தான். முத்ததிற்கு பதில் கை தட்டுதல். நான் எத்தனை முறை கை தட்டுகிறேனோ, அத்தனை முறை தீஷுவும் பதிலிற்கு தட்ட வேண்டும்.





இந்த விளையாட்டுகள், தீஷுவால் மிகவும் விரும்பப்பட்டு, திரும்ப திரும்ப விளையாடப்படுகின்றன.

Wednesday, November 5, 2008

இனி என்ன செய்யப் போகிறார்கள்

தீஷுவும் எங்கள் பக்கத்து வீட்டு இரண்டு வயது குஜராத்தி குழந்தையும் ரொம்ப Friends. நாங்கள் தீஷுவிற்கு தமிழில் பேச மட்டுமே பழக்கினோம். தாய் மொழியை நன்றாக பழகி விட்டால், மத்த எல்லா மொழிகளும் பழகுவது எளிது என்பது எங்கள் கருத்து. இப்பொழுது ஸ்கூலுக்கு போவதால், ஆங்கிலம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். சில நேரங்களில் பதிலும் சொல்கிறாள். அந்த குட்டி குழந்தைக்கு குஜராத்தி மட்டும் புரியும்.


இவுங்க இரண்டு பேரும் விளையாடுவதே ஒரு அழகு. தீஷு அவளை கூப்பிடுவதற்கு முதலில் "வா" என்பாள். அடுத்து "Come" என்பாள். அதுவும் புரியவில்லை என்றால், கையை பிடித்து இழுப்பாள். அடுத்து ஒட ஆரம்பிப்பாள். அந்த குழந்தையும் புரிந்து கொண்டு அவள் பின்னால் ஓடும். இப்படி அவர்களுக்குள் communication ஒரு பிரச்சனை. ஆனாலும் விளையாடுவார்கள். தினமும் குறைந்தது 2-3 மணி நேரம் வரை வீட்டின் முன்னுள்ள புல்லில் விளையாண்டு கொண்டு இருப்பார்கள்.




குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. அக்டோபரில் ஒரு நாள் Snow கூட இருந்தது. இனி விளையாடுவதற்கு என்ன செய்ய போறாங்கனு தெரியல. எனக்கு வீட்டிற்குள் விளையாட அனுமதிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவுங்க வீட்டில allow பண்ண மாட்டாங்க. தீஷு ஏதாவது எடுப்பதற்கு வீட்டிற்குள் வந்தால், அந்த குழந்தையும் வரும். ஆனால் அடுத்த second, அவுங்க அப்பாவோ, nannyயோ வந்து கூட்டிக்கிட்டு போய் விடுவாங்க. இந்த Friendship இப்படியே பிரிந்து போய்விடும் என்பதில் எனக்கு வருத்தம்.




சின்ன வயசுல, நான் தினமும் மதுரையில் எங்கள் தெருவில் விளையாடும் வழக்கம் உண்டு. இன்னமும் சிலரின் நட்பு தொடர்கிறது. நமக்கு கிடைக்காத எத்தனையோ வசதிகள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. ஆனால் சேர்ந்து விளையாட குழந்தைகள்? இந்தியாவிலும் கிட்ட தட்ட இதே நிலைமை தான் என்று நினைக்கிறேன். Apartment என்றால் ஓகே. தனி வீடு என்றால் கஷ்டம் தான். பாவம் குழந்தைகள்...

Monday, November 3, 2008

தண்ணிக் காப்பி சாப்பிட வாரீங்களா!!

தீஷுவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருள் - Disney tea cups. அடிக்கடி விளையாண்டு கொண்டுயிருப்பாள். Jugலிருந்து கப்பில் ஊற்றிக் கொடுப்பாள். நான் வாங்கி கொண்டு "Thank you" என்று சொல்ல வேண்டும். அவள் "You are welcome" என்று சொல்லுவாள்.


இந்த முறை நான் ஜக்கில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவளுக்கு மிகவும் பிடித்து போனது. மாற்றி மாற்றி ஊற்றி விளையாண்டு கொண்டு இருந்தாள். இனி எப்பொழுதும் தண்ணீர் Tea Party தான் எங்க வீட்டில!!!






Art work செய்து ரொம்ப நாள் ஆகி விட்டது. Gumஆல் (ஒட்டப் பயன்படும் கோந்து) ஒரு படம் வரைந்து கொண்டோம். அதன் மேல் மண்ணைத் தூவி, காய வைத்து விட வேண்டும். அதன் மேல் Paint கூட பண்ணலாம். மண்ணிற்கு பதில் உப்பு வைத்து நாங்கள் முன்பே செய்து இருக்கிறோம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost