Tuesday, May 13, 2014

ஆட்டிசம்



பிரியாவும் நானும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். கல்லூரியில் வேறு வேறு  டிபார்ட்மென்ட். படிப்புக்குப் பின் நாங்கள் தொடர்பில் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் மூலம் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் என்றும் மகளுக்கு ஆட்டிசக் குறைபாடு உள்ளது என்றும் அவர் ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஏப்ரல் மாதம் ஆட்டிச விழிப்புணர்வு மாதம். அப்பொழுது தன் அனுபவத்தை பிரியா ஒரு இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார். தன் மகனும் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் தெரப்பிகளுக்குப் பிறகு வெளி வந்து இப்பொழுது ஆறாம் வகுப்பு நன்றாகப் படிக்கிறார் என்று எழுதி இருந்தார். மகள் தெரப்பிகளினால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்றும் எழுதி இருந்தார். அவர் மகள் பற்றி எழுதி இருந்த ஒரு சில விஷயங்கள் மிகவும் ஆச்சரியமூட்டின‌. அந்தக் குழந்தை, அனைவரின் பிறந்தநாளையும் அவர்கள் ஐடி கார்டில் பார்த்து, நினைவில் வைத்து, மாத ஆரம்பத்தில் பரிசு அனுப்புகிறாளாம். எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லி விடுகிறாளாம். அபார ஞாபகசக்தி!

இரண்டு விஷயங்கள், எனக்கு பிரியாவைப் பற்றி எழுத வேண்டும் என்று தூண்டின. ஒன்று பள்ளியில் (integrated school) சேர்க்க பிரியாவும் கணவரும் பட்டக் கஷ்டங்கள். இரண்டு, பள்ளியிலும் மற்றும் பொது இடங்களிலும் மற்றவர்களால் அந்தக் குழந்தைகளும் குடும்பத்தவருக்கும் ஏற்படும் நிராகரிப்புகளும் வேதனைகளும். சில இடங்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.  

பிரியாவின் மகள் நடனம் ஆடியதையும் பாடியதையும் வீடியோகளில் பார்க்தேன். மகன் செய்த வாகனம் ஒன்றின் புகைப்படம் பார்த்தேன். அவர்களின் பலத்தை அறிந்து அதற்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். பிரியா கடக்கின்ற பாதை கரடு முரடாக இருந்தாலும், அவரின் நம்பிக்கையும், தன் இரு குழந்தைகளின் கரம் பற்றி அவர் அழைத்துச் செல்லும் விதமும் வியக்க வைக்கின்றன‌. அன்புடனும் நம்பிக்கையுடனும் பயிற்சிக் கொடுத்தால், பிரியாவின் குழந்தைகள் போல் மற்ற குழந்தைகளும் ஜொலிப்பார்கள் என்று நம்பிக்கை வருகிறது

பிரியாவின் எழுத்து கண்டிப்பாக பலரை சென்ற‌டைந்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும். என்னால் மேலும் இருவருக்காவது நம்பிக்கை கொடுக்கும் என்ற ஆசையில் அவரின் எழுத்துகளை பகிர்ந்து இருக்கிறேன். 

அவரின் படைப்பின் முகவரி : http://thealternative.in/inclusivity/living-with-autism-a-family-in-the-spectrum/ 

Hats off to you Priya! I wish your kids a bright and happy future!

Thanks google for the image.

9 comments:

  1. ***With autism being part of our lives, we have missed a lot of social events as we couldn’t leave our daughter to anybody else for a long time. Whenever there is a behavioural spike, only we know how to handle it . The other issue is that of regression – whenever that happens, we need to redo the program which she has already finished. This really adds to our stress levels, which obviously takes a toll on our health.

    As a father, my husband has to run around earning money, and as a mother, I need to run behind my children, so we definitely miss being a regular family. The therapy costs have prevented us from being able to afford a house or a car.

    What actually drives us everyday? It is the improvement in children that they show us day by day. We’d like to share that acceptance and unconditional love does work for children to improve. Stand by them, and it makes a difference in their lives***

    நம்மள சுத்தி உள்ள "சொசைட்டி" இதுபோல் சூழல்களில் ரொம்ப முக்கியம். எனக்குத் தெரிய ஒரு ப்ரஃபெஸர், இந்தியாவிலேயே well-established guy, இதுபோல் குழந்தையை பெற்றதால், யு எஸ் வந்து செட்டிலாகிவிட்டார். சுற்றுப்புற சூழல் இங்கே பெட்டராக (a civilized society who wont look down on your children) இருக்குமென்று கருதி.

    What if I happened to have child like that?

    Well, we must face the problem and try to solve it as much as we can. We must change our life-style, and friends and environment and whatever it takes. I dont see any other way out or "escape" here. You can not run away from this sort of problem!

    I am sure, I will think about your friend, Priya, whenever I hear about Autism, Dhiyana!

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மையான கருத்து வருண்!

      இந்தியாவில் குழந்தை பொது இடத்தில் அழுது புரண்டால், சரியாக வளர்க்கவில்லை என்ற‌ கெட்டப் பெயர் பெற்றோருக்கு தரப்படும். இங்கு அழுதால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

      பிரியாவை நினைத்துக் கொள்வேன் என்றதற்கு நன்றிகள் வருண்! பல பெற்றோர் அவர் சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால் என்னுடன் சிரித்து பேசி பழகியவர் எனும் பொழுது வலி அதிகமாக இருக்கிறது!

      Delete
  2. அனைத்து குழந்தைகளும் இதிலிருந்து மீள வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே வேண்டுதல் தான் தனபாலன்! நன்றி உங்கள் வருகைக்கு!

      Delete
  3. சமீபத்தில் நானும் ஆட்டிஸம் பற்றி எழுதியிருந்தேன். அதில் ஒரு தாய் பின்னூட்டம் இட்டிருக்கிறார். படித்தவுடனே அழுகை வந்தவிட்டது. ஆனால் அவர் ரொம்பவும் தைரியமாக 'கண்டிப்பாக கரை ஏறிவிடுவான்' என்று தனது குழந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு உங்கள் தோழியின் பதிவு விவரங்களை அனுப்புகிறேன். பயன்படும் என்று நினைக்கிறேன்.

    எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் கூட குழந்தையின் காரணமாக அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்கள். இங்கு யாரும் சரியாக புரிந்துகொள்வதில்லை என்று சொல்லுகிறார்கள்.

    எந்தக் குழந்தைக்கும் இந்த குறை வரக் கூடாது என்ற பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்ளுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இடுகையை படித்துப் பார்த்தேன் அம்மா. திரு. பாலபாரதியின் ஒன்று கூடல் பற்றி தெரிந்திருந்தால் என் தளத்திலும் பகிர்ந்திருப்பேன்.

      மஹா அவர்களின் தள முகவரி தங்களுக்குத் தெரியுமா?

      Delete
    2. தனிமடல் அனுப்பியிருக்கிறேன், தியானா உங்களுக்கு.

      Delete
    3. நன்றி அம்மா!

      Delete
  4. எனது நண்பர் ஒருவரின் மகனுக்கு ஆட்டிசம் இருக்கிறது. இங்கே புரிதல் இல்லை என்பதை பல முறை கண்டிருக்கிறேன்....

    விரைவில் அக்குழந்தை நலம் பெறட்டும்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost