எனக்கும் என் கணவருக்கும் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் நூலகம் என்பது எங்கள் எதிர்கால கனவு. எங்கள் குழந்தைகள் இருவருக்கும் புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் உண்டு. அதில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள் பற்றிய இடுகை இது. இரண்டு வயது வரைக்கான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்கள்.
1. Bright Baby Pack : நான்கு தனித்தனி புத்தகங்கள். இரண்டு துணி புத்தகங்கள் மற்றும் இரண்டு காகித (அட்டை) புத்தகங்கள். சம்மு பிறப்பதற்கு முன்பு வாங்கினோம். அவள் மூன்று மாத குழந்தையாக இருந்தபொழுது திடீரென்று பால் குடிப்பதை நிறுத்திவிட்டாள். ஒவ்வொரு ஸ்பூனாக பால் கொடுத்தோம். அவள் தலையை அசைத்துவிட்டால் பால் கொட்டிவிடும் என்பதால் அவள் கவனத்தைப் புத்தகத்தில் வைத்திருப்போம். ஒருவர் புகட்டும் பொழுது மற்றொருவர் புத்தகத்தை வாசித்துக் காட்டுவோம். மிகவும் ரசித்தாள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம். சில குறைகள் (உதாரணத்திற்கு பசுவுற்கு பதில் கன்று) இருந்தாலும் எங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.
2. Smile : அன்பளிப்பாக வந்தது. குழந்தைகளின் சிரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. சம்முவிற்கு மிகவும் பிடித்த புத்தகம். புகைப்படத்தில் இருப்பது போல் செய்து பார்ப்பாள். ஆனால் புத்தகம் எளிதில் கிழிந்துவிட்டது.
3. Duck and Goose : எளிய ஓவியங்களுடன் சிறு வாக்கியங்கள் அடங்கிய புத்தகங்கள். நிறைய தலைப்புகளில் கிடைக்கின்றன. நாங்கள் படித்த அனைத்துப் புத்தகங்களும் எங்களுக்குப் பிடித்திருந்தன.
4. National Geographic Little kids: பல தலைப்புகளில் கிடைக்கின்றன. நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தோம். வண்ணமயமான புகைப்படங்கள் இதன் சிறப்பம்சம். இதன் ஸேப்ஸ்(Shapes) புத்தகம் படிக்கும் பொழுது தான் வடிவங்கள் கண்டுபிடிக்க சம்மு கற்றுக் கொண்டாள். :))
5. I Spy : பல தலைப்புகளில் கிடைக்கும் இந்தப் புத்தகங்களில் I Spy little letters, I Spy little numbers, I Spy wheels மற்றும் I Spy toys மட்டுமே படித்திருக்கிறோம். மற்ற தலைப்புகளில் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த வேண்டும். பல பொருட்களின் படங்கள் இருப்பதால் பொருட்களின் அறிமுகங்கள் மற்றும் அதன் பெயர்களை குழந்தைகள் அறிந்து கொள்ளலாம்.
படங்கள் உதவி : amazon.com
இவை எங்களுக்குப் பிடித்தவை. உங்களுக்குப் பிடித்த சில புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துகளேன்!!
உங்களின் எதிர்க்கால கனவு விரைவில் நடக்கட்டும்... வாழ்த்துக்கள்... உங்களின் அக்கறைக்கு பாராட்டுக்கள் பல...
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteநல்ல புத்தகங்களின் அறிமுகம் - நன்று....
ReplyDeleteத.ம. 2
வணக்கம்
ReplyDeleteசிந்தனையின் செயல் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துத்தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
ReplyDeleteMy daughter favorite books are
ReplyDeleteDear Zoo, Ginger bread man
My daughter favourite books are
ReplyDeleteDear zoo, Ginger bread man
நல்லாருக்கு உங்க தொகுப்பு!
ReplyDeleteI Spy - பப்புவுக்கு மிகவும் பிடித்த வரிசை.
சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteநல்ல தொகுப்பு...
ReplyDeleteஇப்பொழுது Little Bear series பிடிக்கும் தியானா...