Sunday, May 23, 2010

இருவர் இருந்தால்

முன்பே ஆட் (odd) ஈவன் (even) சொல்லிக் கொடுத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடமான நிலையில் இப்பொழுது அதைச் செய்தோம். தீஷுவிற்கு முன்பு செய்தது சுத்தமாக நினைவில் இல்லை. இந்த முறை சோழிகளுக்கு பதில் கண்ணாடி கற்கள்.


5*2 டேமில் ஒன்று excel லில் போட்டு பத்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். எங்கள் உறவினர் குழந்தையும் அன்று வந்திருந்தாள். இருவரும் சேர்ந்து செய்தனர். முதலில் 1 முதல் பத்து வரை எழுதி இருந்த அட்டைகளை வரிசையாக அடுக்கினர். பின்பு பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பர் வைத்து, அட்டையில் எழுதியிருந்த எண்ணின் மதிப்பிற்கு ஏற்ப ஒருவர் ஒருவர் மாற்றி வைத்தனர். ஒன்று - பக்கத்தில் ஜோடி இல்லாமல் இருக்கும், இரண்டில் ஜோடி இருக்கும், மூன்றில் ஜோடி இல்லாமல் இருக்கும் என்று வரிசையாக வைத்துக் கொண்டே வந்தனர். பக்கத்தில் ஃப்ரெண்ட் இருந்தால் ஈவன் என்றும், ஃப்ரெண்ட் இல்லையென்றால் ஆட் என்றும் சொல்லிக் கொடுத்தேன். இருவருக்கும் விளையாட்டு எண்ணத்தில் புரிந்த மாதிரி தெரியவில்லை.


பின்பு என் தோழியும் இதே மாதிரி தீஷுவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். எப்படி புரிந்ததோ, மறுமுறை ஆட், ஈவன் என்றவுடன் டேபில் இல்லாமலே ஜோடி ஜோடியாக வைக்கத் தொடங்கினாள். மிகவும் எளிதாக செய்தாள். செய்கிறாள். மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு வாரமாக செய்து கொண்டிருந்தாள்.

அட்டைகளும் கற்களும் வைத்திருந்த நிலையில், ஈவனில் மட்டும் குதி எனறவுடன் ஒரு எண் மாற்றி மாற்றி குதித்தாள். இப்பொழுது ஒர் இலக்க எண்களில் ஆட் ஈவன் கற்களின் தேவையில்லாமல் சொல்லத்தெரிகிறது.

தரையில் எண்களை வரிசையாக எழுதிக் கொண்டேன். ஆடில் குதி என்றவுடன் 1,3,5,7,9 எழுதின கட்டத்தில் குதிக்க வேண்டும். இது போன்ற பயிற்சி ஒன்று விட்டு ஒன்று ஆட் என்று எளிதாக புரிய வைப்பதற்கு.

2 comments:

  1. நல்ல டைம்பாஸ்...இல்லையா..தீஷூவின் ஆடன் ஞாபகம் வந்துவிட்டது! நல்ல பகிர்வு!

    ReplyDelete
  2. odd சொல்லில் உள்ள எழுத்துகள் ஒற்றைப்படை. even என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் இரரட்டைப்படை :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost