இப்பொழுது தீஷுவுடனான என் பொழுது வாசிப்பதில் தான் போகிறது. நான் அவளுக்கு வாசித்து காண்பிப்பதிலோ அல்லது அவளை வாசிக்க பழக்குவதிலோ.
Sight words பற்றி எழுதியிருந்தேன். அவற்றை இப்பொழுது தீஷு கண்டுபிடிப்பதால், அவற்றைக் கொண்டு வார்த்தைகள் பழக்கலாம் என்று நினைத்தேன். உதாரணத்திற்கு at தெரிவதால், c-at, b-at, h-at போன்றவற்றை வாசிக்க பழக்குவது. அதற்கு முன்பு செய்த இந்த புத்தகம் போல் செய்து கொண்டேன். இதில் முதல் பாகத்தில் ஒரு எழுத்தும், இரண்டாம் பாகத்தில் இரண்டு எழுத்துகள்.c & at என்று சேர்த்து வாசிக்க வேண்டும். இது எழுத்துகளை blend செய்து வாசிக்க பழக உதவும்.
தீஷு காலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கும் முன்னே எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமா அல்லது பல் தேய்ப்பதைத் தள்ளி போடவா என்று கண்டுபிடிக்க அடுத்த ஒன்றும் ரெடி. இந்த முறை sight words இல்லாமல் og, ig, ed போன்றவை பயன்படுத்தினேன். CVC வார்த்தைகளில் vowelசில் e,i போன்றவற்றில் அவளுக்குப் பயிற்சி தேவைப்பட்டது. அந்த பயிற்சிக்கு இவை உதவும். இவற்றில் பல அர்த்தமில்லா வார்த்தைகளும் வருகின்றன. தீஷு வாசித்தவுடன் Silly words என்று சொல்லிக் கொள்கிறாள்.
இது போல் செய்ய விரும்புபவர்கள் இங்கிருந்து தரமிறக்கிக் கொள்ளலாம்.

நல்ல பகிர்வு தியானா. /இவற்றில் பல அர்த்தமில்லா வார்த்தைகளும் வருகின்றன. தீஷு வாசித்தவுடன் Silly words என்று சொல்லிக் கொள்கிறாள்.
ReplyDelete/ தீஷூ கலக்கறாங்க! ரொம்ப பிசியா..முன்னாடி மாதிரி அடிக்கடி அப்டேட் பண்ணலை?
ரொம்ப நல்ல அம்மாவா இருக்கீங்க. ஆச்சரியமா இருக்கு உங்களைப் பார்த்து. எனக்கு இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து உங்கள் பதிவுகள் தேவைப்படலாம்.
ReplyDeleteஆமாம் முல்லை. பிசியோடு சோம்பேறித்தனமும் சேர்ந்திடுச்சு.. இந்த பதிவு கூட எழுதி 10 நாட்களாகி விட்டன. பப்ளிஷ் பண்ண 10 நாட்கள்!!!
ReplyDeleteநன்றி விக்னேஷ்வரி.. ரொம்ப அம்மாவெல்லாம் இல்லப்பா.. பாவம் தீஷு!!
Hi Dhiyana.
ReplyDeleteDo you have the blend&blend1 you have mentioned in the post?
Hi Agila, I could not find the docs. I have created one and updated the link. I think you should be able to download now.
ReplyDeleteThanks Dhiyana. Just did.
ReplyDelete