அடுத்த மாதம் தீஷுவிற்கு ஐந்தாவது பிறந்த நாள். இந்த ஐந்து வருடத்திற்குள் நான்காவது வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்தவுடன் புது வீட்டிற்கு போவோம் என்று ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தாலும், சொந்த வீடு என்பதால் அதிலிருந்து மாற வேண்டியிருக்காது என்பதால் நிரந்தர மாற்றமாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் மீண்டும் ஒரு தற்கால மாற்றம். மீண்டும் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.
ஒவ்வொரு மாற்றமும் தீஷுவை கண்டிப்பாக பாதித்து இருக்கும். ஆனால் அவள் எப்பொழுதும் நேராக காண்பித்தத்தில்லை. போன முறை நியூ ஜெர்ஸியிலிருந்து இந்தியா திரும்பிய பொழுது, தீஷுவிற்கு இரண்டே முக்கால் வயது. இடமாற்றம் பெரிதாக புரியவில்லை. ஆனால் இப்பொழுது நன்றாக விவரம் புரியும் வயது. பெங்களூரில் நண்பர்கள் / உறவினர்களுடன் விளையாடி, வாழ்ந்து பழகிவிட்டாள். என்ன செய்ய போகிறாள் என்று தெரியவில்லை. இங்கு வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. பெரிதாக நண்பர்கள் பற்றி கேட்கவில்லை. ஆனால் அவள் பள்ளியைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாள். மாற்றத்தை ஏற்று கொண்டாள் என்றே நினைக்கிறோம். இப்படியே நாங்கள் மாறிக் கொண்டே இருப்பதால் நிலையான ஒரு நண்பர் கூட்டம் அவளுக்குக் கிடைப்பதில்லை. நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
மீண்டும் இரண்டு வருடத்தில் இந்தியா திரும்பும் யோசனை இருப்பதால், கிளம்பும் முன் தீஷுவின் பழைய இந்திய பள்ளி ஆசிரியரை சந்தித்து பேசினோம். ஹிந்தி கண்டிப்பாக வீட்டில் சொல்லித்தர வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் மூன்றாம் மொழி கற்க வேண்டும் என்பதால், அதிகபட்சமாக அவள் மூன்றாம் வகுப்பு முடித்தவுடன் வந்தால் எளிதாக இருக்கும் என்றார்கள். U.K.G மற்றும் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகங்கள் கொடுத்து இருக்கிறார்கள். தீஷு பள்ளியில் வெறும் மாண்டிசோரி மட்டும் தான். ஒன்றாம் வகுப்பு என்று தனியாக கிடையாது. ஆனால் எங்களுக்காக மற்ற பள்ளியிலிருந்து புத்தகங்கள் வாங்கி கொடுத்திருக்கிறர்ர்கள். எவ்வாறு சொல்லித்தர வேண்டும் என்று எனக்கு அரை மணி நேரம் விளக்கினார்கள். என்ன செய்ய போகிறேன் என்றே தெரியவில்லை.
தீஷுவிற்கு இங்கு பள்ளி ஆகெஸ்ட்டில் தான். பொழுது போகாமல் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். திரும்பி இந்தியா போகும் பொழுது இன்னும் வயது அதிகமாகிவிடும் என்பதால் அந்த மாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று இப்பொழுதே பயமாக இருக்கிறது.
Games to play with 3 year old without anything
2 years ago
With all your efforts and the way you do things for her, do not worry at all. She is gonna do well anywhere!
ReplyDelete