விளையாடுவது குழந்தைகளின் விருப்பமான வேலை. விளையாட்டின் மூலம் அவர்களுக்கேத் தெரியாமல் நிறைய கற்றும் கொள்வார்கள். சிறு வயதில் என் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று ஒற்றையா, இரட்டையா.
புளியங்கொட்டைகள் வைத்து விளையாடுவோம். இருக்கும் புளியங்கொட்டைகளை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். நம் பங்கில் சிறிதை கையில் எடுத்து நம் அருகில் இருப்பவரிடம் ஒத்தையா இரட்டையா என்று கேட்க வேண்டும். அவர் சொன்னவுடன், நம் கையில் இருக்கும் கொட்டைகளை இரண்டு இரண்டாக வைக்க வேண்டும். அவர் சொன்னது சரியாக இருந்தால், நம் கையில் எடுத்த அனைத்தையும் கொடுத்து விட வேண்டும். தவறாக இருந்தால் அவரிடம் அதே அளவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
தீஷுவிற்கு Counting by 2 சொல்லிக் கொடுப்பதற்கு ஒற்றையா இரட்டையா விளையாட ஆரம்பித்தோம். இரண்டு இரண்டாக வைப்பதற்கு பதிலாக இரண்டு இரண்டாக எண்ண வேண்டும். இந்த எளிதான விளையாட்டு மூலம் மிகவும் எளிதாக இரண்டு இரண்டாக எண்ண பழகிக் கொண்டாள். அது மட்டும் இல்லாமல், நிறைய கற்றல்கள் இந்த விளையாட்டில் உள்ளன. காய்களை இருவருக்கு அல்லது மூவருக்குப் பிரித்தல் (வகுத்தல்), இரண்டு இரண்டாக எண்ணுதல், வெற்றி தோல்வி, ஒரிரு காய்கள் விளையாட்டின் நடுவில் நம்மிடம் இருந்தாலும் இறுதியில் வெல்லுதல் போன்றன. தீஷுவிற்கும் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment