வெகு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை. அலுவலகத்திலும் வீட்டிலும் வேலை அதிகம். இரண்டும் இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும். தீஷுவும் நானும் சேர்ந்து செலவிடும் நேரம் மிகவும் குறைந்து விட்டது. அவளே வருத்தமாக நீங்கள் என் கூட ஆக்டிவிட்டி பண்ண வரதில்லை என்கிறாள்.
தீஷுவிற்கு இரண்டு எண்களில் பெரிய/சிறிய எண் கண்டுபிடிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்திருதேன். பாசி வைத்து செய்யலாமா அல்லது சோழி வைத்து செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவளை புத்தகம் வாசிக்கச் சொல்லி விட்டு நான் சமைத்துக் கொண்டு இருந்தேன். வாசித்தது போதும் என்றாள். எனக்கு வேலை பாக்கி இருந்தது. அவளை அது வரை ஏதாவது செய்ய வைக்க வேண்டும். அந்த புத்தக்கத்தில் பக்க எண் (page number)சற்று பெரியதாக கவனத்தை ஈர்ப்பது போல் இருந்தது. புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்து அவளிடம் கொடுத்து, இன்னொரு பக்கத்தின் எண்ணை சொன்னேன். நான் சொல்லும் எண் இருக்கும் பக்கத்தை அவள் எடுக்க வேண்டும். சொல்லும் எண் கொடுத்திருக்கும் பக்கத்தின் எண்ணை விட பெரியதா சிறியதா என்று யோசித்து முன்போ பின்போ செல்ல வேண்டும். முதலில் பெரிய எண் சிறிய எண் கண்டுபிடிக்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் பக்கங்களை திருப்பிக் கொண்டு வந்தால் எண்கள் அதிகரிக்கின்றன என்பதை புரிந்து கொண்டாள். மீண்டும் மீண்டும் ஒரு வாரத்திற்கு நான் சமைக்கும் பொழுது அதேயே செய்தோம். நன்றாக புரிந்து கொண்டாள். இப்பொழுது புத்தகத்தின் உதவி இல்லாமல் பெரிய எண், சிறிய எண் சொல்ல தெரிகிறது.
குழந்தைகள் அனைத்தின் மூலமும் கற்று கொண்டே இருக்கிறார்கள்.
Games to play with 3 year old without anything
2 years ago