சென்ற முறை தீஷுவிற்கு
கழித்தல் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவளுக்குத் தெளிவாகப் புரியவில்லை. மீண்டும் முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். இந்த முறை வேறு முறையில் செய்தோம்.
நான் ஒரு வட்டம் வரைந்து, அதை நீல நிறத்தில் கலர் செய்து கொண்டேன். இது குளம். எங்களிடம் இருந்த மீன் பொம்மைகள் கிண்ணத்தில் எடுத்து கொண்டோம். கழித்தலில் முதல் எண்ணின் அளவு மீனை குளத்தில் வைக்க வேண்டும். இரண்டாம் எண்ணின் அளவு மீனை குளத்திலிருந்து எடுத்து ஊருக்கு அனுப்பிவிட வேண்டும். விடையை எழுதியவுடன் அனைத்தையும் கிண்ணத்தில் வைத்து விட வேண்டும். மீண்டும் அடுத்த கணக்கு.
தீஷுவிற்கு புரிந்துவிட்டது. பிடித்தும் விட்டது. தினமும் மூன்று நான்கு கழித்தல் கணக்குகள் செய்கிறோம்.
சூப்பர்.. :))
ReplyDeleteசூப்பர் தியானா! இது நல்ல ஐடியாவா இருக்கே! அப்புறம் அந்த மீன்கள் செம அழகா இருக்கு பார்க்க!
ReplyDeleteஇயற்கை பெயின்ட் செய்து பார்த்தோம்,இப்போ கழித்தல் கத்துக் கொடுக்கற முறையும் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteதிஷூ மூலமா பெரியவங்களும் வெரைட்டியா கத்துக்கலாம் போல இருக்கே,நன்றி திஷூ