இப்பொழுது தான், காய்களின் அளவைப் பார்த்தேன். ஆறு முக்கோணங்கள் ஒரு ஹெக்ஸகனில் பொருந்துகிறது, மூன்று முக்கோணங்கள் டிரப்பிஸெயத்திலும், இரண்டு டைமண்டிலும் பொருந்துகிறது. தீஷுவிற்கு முக்கோணங்களை ஹெக்ஸகனில் பொருத்திக்காட்டினேன். அவளாகவே டிரப்பிஸெயமும், முக்கோணமும், டைமண்டும் முக்கோணமும் என்று பல வகைகளில் பல வடிவங்கள் உருவாக்கிக்கொண்டுயிருந்தாள்.
அப்பொழுது தான் எனக்கு இந்த யோசனைத் தோன்றியது. ஆனால் என்னால் செயல் வடிவம் கொடுக்க முடியவில்லை. என் வழக்கப்படி வலையில் தேடினேன். அது போல் கிடைக்கவில்லை. அப்பாவிடம் சொன்னவுடன் வரைந்து கொடுத்தார். ஒரு பெரிய ஹெக்ஸகனை முக்கோணம் கொண்டு உருவாக்குவது. அப்பா எங்களிடம் இருந்த முக்கோண அளவை கணக்கில் கொண்டு வரைந்தார்.
அந்தப்படத்தை வெவ்வேறு வடிவங்கள் கொண்டு உருவாக்குகிறோம். இப்பொழுது சைனீஸ் செக்கர்ஸ் போர்டில் ஆறு முக்கோணங்களைச் சேர்த்து ஹெக்ஸகன் என்று சொல்லும் அளவிற்கு தீஷுவிற்கு புரிந்து இருக்கிறது.
No comments:
Post a Comment