ஹோமியோபதி மாத்திரை வைத்துக் கொடுத்த டப்பா இரண்டு இருந்தது. அதில் ஒன்றில் மாத்திரையும் மற்றொன்றில் எதுவும் இல்லை. தீஷு அதை குலுக்கிப் பார்த்து, ஸாவுண்டு என்றாள். அடுத்தை எடுத்து நோ ஸாவுண்டு என்றாள். இதைப்போன்று முன்னமே செய்திருக்கிறோம். தீஷு ஸாவுண்டு மாட்சிங் செய்ய ஆர்வம் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. காலியாக இருந்த டப்பாவில் கடுகு நிரம்பிக்கொடுத்தேன். அவளாக ஒன்றைக் குலுக்கிப்பார்த்து லவுடு, மற்றொன்றை (கடுகை) ஸாஃப்ட் என்றாள். அது முடிந்து நான்கு ஐந்து நாட்கள் ஆன நிலையில் இன்று ஸாவுண்டு சார்ட்டிங் கொடுத்தேன். இரண்டு டப்பாவில் கடுகு மற்றும் இரண்டில் மாத்திரை இருந்தது. கடுகுள்ள இரண்டையும், மாத்திரை இருந்த இரண்டையும் இனைக்க வேண்டும். எளிதாகச்செய்தாள். அதிக சத்தம் வரும் இரண்டும் மாத்திரை, மெல்லிய சத்தம் கடுகு என்று கொண்டு பிரிக்க வேண்டும்
தீஷு ஸ்கூலில் வாரம் ஒரு முறை அவளுக்கு வீட்டில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று டைரியில் எழுதி விடுவர். எப்பொழுதும் இந்த பாட்டுப் பாடுங்கள், ஆங்கிலத்தில் உரையாடுங்கள், காய்கறி கண்டுபிடிக்கப் பழுக்குங்கள் என்று அந்த வாரம் வகுப்பில் என்ன சொல்லிக் கொடுத்தனரோ அதை மீண்டும் வீட்டில் செய்ய சொல்லி இருப்பர். இந்த முறை வித்தியாசமாக தீஷுவிற்கு உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு சுவைகளைக் கண்டுபிடிக்கப் பழக்குங்கள் என்று வந்திருந்தது. அதனால் இதைச் செய்தோம். மூன்று கிண்ணங்களில் ஒன்றில் சக்கரைத்தண்ணீர், மற்றொன்றில் உப்பு நீர், மூன்றாவதில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் எடுத்துக் கொண்டோம். முதலில் ஒரு ஸ்பூன் மூலம் அனைத்து தண்ணீரையும் எடுத்துக் கொடுத்து அதன் சுவையைச் சொல்லச் சொன்னேன். தப்பு அதிகமாக இருந்தது. உப்பு நீர் முடித்தவுடன் சக்கரைத் தண்ணீரை எடுத்தால், அதில் உப்பு சுவையும் இருந்ததால், கண்டுபிடிக்கக் கஷ்டமாக இருந்திருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்பூனாக மாற்றியவுடன், எளிதாகச் செய்தாள். இவை இரண்டும் மாண்டிசோரியின் முக்கிய கருத்தானப் பூலன்கள் மூலம் கற்றலுக்கு மிகவும் ஏற்றது.
அருமை.. எதை வைத்து வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாமென புரிகிறது
ReplyDeleteநல்லாருக்கு தியானா! இப்போதான் புரியுது...சவுண்ட் சார்ட்டிங் பற்றி..பப்பு முன்பு உளுந்து டப்பா, பருப்பு டப்பா மற்றும் கொண்டைக்கடலை டப்பாவை குலுக்கி பார்த்து சில தடவைகள் கீழேபோட்டுமிருக்கிறாள்!! :)))
ReplyDelete/உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு சுவைகளைக் கண்டுபிடிக்கப் பழக்குங்கள் என்று வந்திருந்தது./
இது நல்லாருக்கே...டிரை செய்கிறேன்!! ஐடியாவிற்கு நன்றி!!