கிறிஸ்துமல் சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசு கொடுக்கும் வழக்கம் உண்டு. பிடிக்காத பரிசுடன் பில் இருந்தால் கடையில் திருப்பி கொடுத்து விடுவர். திருப்பிக் கொடுக்க முடியாத ஆனால் தங்களுக்குப் பிடிக்காத பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும். எங்காவது செல்லும் பொழுது, Garage Sale பார்த்தால் நிறுத்திப் பார்க்கும் வழக்கம் எங்களுக்கு இருந்தது.
உபயோகப்படுத்தியப் பொருட்கள் வாங்குவது கேவலம் என்ற எண்ணமும் இருந்தது உண்டு. ஆனால் அரிய புத்தகங்கள் நல்ல நிலையில் இருந்தால் வாங்குவோம். சில நேரங்களில் ஃபாக்கிங் கூட கிழிக்காத புத்தகங்கள், பஸில் முதலியன கிடைக்கும். அப்படி வாங்கியது தான் டோமினோஸ். தீஷுவிற்கு அப்பொழுது ஒரு வயது கூட நிரம்பவில்லை. ஆனால் ஃபாக்கிங் கூட கிழிக்காமல் இருந்ததால் அதன் மேல் ஒரு விருப்பம். பின்னர் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று வாங்கி வந்தோம். பெரிய சைஸ் மரக்கட்டைகளில் கலர் புள்ளிகள். அனைத்து கட்டைகளையும் வைப்பதற்கு மரத்திலான ஒரு டப்பா. பார்க்கவே கொள்ளை அழகு.
ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் பொழுது, எங்களுக்கு அப்பொழுது உபயோகப்படாதப் பொருட்களைக் கொண்டு வந்து, என் தங்கை வீட்டிலோ, அம்மா வீட்டிலோ வைத்து விடுவோம். மொத்தமாக திரும்பி வரும் பொழுது வெயிட் பிரச்சனையை சமாளிக்கவே இந்த யோசனை. டோமினோஸை என் தங்கை வீட்டில் வைத்து விட்டு, மறந்தும் விட்டோம். இந்த முறை சென்னை சென்ற பொழுது, தங்கை வீட்டில் வேறுவொரு பொருள் தேடும் பொழுது டோமினோவைப் பார்த்தேன். தீஷுவிற்கு பார்த்தவுடன் பிடித்து விட்டது. வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
பெங்களூருக்கு எடுத்து வந்து, எவ்வாறு அடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். புள்ளிகளை எண்ணி அதற்கு தகுந்தாற்போல் அடுத்தக் கட்டையை எடுத்து வைக்கிறாள். எடுத்தால் வெகு நேரத்திற்கு அவளுக்கு அதன் மேல் ஆர்வம் இருக்கிறது. இப்பொழுது அவள் எண்ணும் திறன் வளர்வதற்கு உதவுகிறது. அடுத்து இதன் மூலம் கூட்டல் சொல்லிக் கொடுக்கும் ஐடியா இருக்கிறது.
சென்னையிலும் இது கிடைக்குதான்னு பார்க்குறேன். நீங்கள் சொன்ன மாதிரி, கணக்கு சொல்லித்தர இது மிகவும் உதவும் என நினைக்கிறேன். உபயோகமான பதிவு. உங்கள் வலைத்தளத்திலுள்ளவற்றை என் மகனுக்கு சொல்லித் தருகிறேன். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
ReplyDeleteசில சமயம் அருமையான புத்ததகங்கள் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளில் கிடைப்பதுண்டு.
ReplyDelete