எப்பொழுதும் போல் இல்லாமல் அவளுக்கு விருப்பமானதில் செய்யலாம் என்று செருப்பு செய்தோம். அவள் கால்களை ஒரு அட்டையில் வரைந்து வெட்டிக் கொண்டேன். கட்டை விரல் அருகில் ஒரு ஓட்டையும், பாத பகுதிக்கு அருகில் இரு ஓட்டைகளும் போட்டுக்கொண்டேன். பைப் க்ளீனர் ( செயற்கை செடிகள் செய்ய பயன்படுவது என்று நினைக்கிறேன்) கொண்டு மேலிருந்து கீழேயுள்ள ஓட்டையில் மாட்டினேன். இதேப் போல் இன்னொன்றிலும் மாட்டினேன். செருப்பு ரெடி. தீஷுவை சேர்க்க வேண்டும் என்பதற்காக பைப் க்ளீனர் மட்டும் முன் அவளை அட்டையில் கலர் செய்ய சொன்னேன். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதை மாட்டிக்கொண்டு நடக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் விருப்பமாக அணிந்து கொண்டுயிருந்தாள்.
இது ஒரு புத்தகத்தில் படித்தது. ஒரு பெயிண்ட்டிங் கான்வாஸ் எடுத்துக் கொண்டோம். மாஸ்கிங் டேப் எடுக்கும் பொழுது பேப்பர் கிழிந்து விடும் என்பதால் கான்வாஸ். மாஸ்கிங் டேப்பை (சாதாரண செல்லோ டேப் கூட உபயோகப்படுத்தலாம்) கான்வாஸில் ஒட்டி ஏதாவது டிஸேன் உருவாக்க வேண்டும். பின் கான்வாஸ் முழுவதும் பெயிண்ட் செய்ய வேண்டும். செல்லோ டேப்பில் பட்டால் பரவாயில்லை. அதன் வழியே பெயிண்ட் உள்ளே செல்லாது. பெயிண்ட் காய்ந்தவுடன் டேப்பை எடுத்து விட வேண்டும். எடுத்தப்பின் டேப் இருந்த இடம் மட்டும் வெண்மையாகவும், மற்ற இடங்களில் பெயிண்ட்டும் கொண்ட அழகிய பெயிண்ட்டிங் ரெடி. தீஷு கான்வாஸ் முழுவதும் பெயிண்ட் செய்யாமல் இடைப்பட்ட இடங்களில் மட்டும் (கலரிங் செய்வது) போல் செய்தாள். மிகவும் நன்றாக வந்தது என்று சொல்ல முடியாது.
Am going to try this tape painting Dhiyana. And I see a nice designer in you..do more and more dear! :-)
ReplyDelete